districts

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சிலம்பம் போட்டி: பதக்கங்கள் 

சேலம், ஜூன் 5- தேசிய சிலம்பம் போட்டியில் சேலம் மாணவர்கள்  தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று குவித்துள்ள னர்.

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில்,  தேசிய அளவிலான ஜூனியர் சிலம்பம் சாம்பியன்ஷிப்  போட்டி, கோவையிலுள்ள கற்பகம் பல்கலைக்கழ கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பில்  பங்கேற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாண விகள் 4 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கல பதக்கங் களை வெற்றனர். தேசிய அளவிலான போட்டியில் பதக்கங்களை குவிந்த மாணவ, மாணவிகளுக்கு சேலம்  மாவட்ட சிலம்பம் அடிமுறை சங்கத்தின் தலைவர் பவித்ரா ராஜா, துணைத்தலைவர் சோலைமுத்து, 

செயலாளர் ஜீவா, ஜேகே இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இயக்குநர் சுதாகர் ஆகியோர் வாழ்த்து தெரி வித்தனர்.

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

சேலம், ஜூன் 5- மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தைவிட, திறக்கப் படும் தண்ணீர் அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை  பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வ ரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. தற்போது  போதிய அளவில் மழை இல்லததால் மேட்டூர் அணைக்கு செவ்வாயன்று 89 கன அடியாக இருந்த  நீர்வரத்து, புதனன்று காலை 286 கன அடியாக அதிக ரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப் பட்டு வருகிறது. நீர் வரத்தைவிட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதன்படி, செவ்வாயன்று 45.47 அடியாக இருந்த நீர்மட் டம், புதனன்று காலை 8 மணி அளவில் 45.18அடியாக குறைந்தது. நீர் இருப்பு 14.91 டி.எம்.சி.யாக உள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி

ஈரோடு, ஜூன் 5- ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.2  கோடி அளவுக்கு பணம் வசூல் செய்து மோசடி செய்த தாக முதியவர் மீது ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு கவுண்டச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த வர் ராமசாமி (82). இவரது மகன் அருள்வேல். ராமசா மிக்கு கோவை மாவட்டம், வடவள்ளி பகுதி யைச் சேர்ந்த தங்கவேல் (79) என்பவர் அறிமுகமாகி யுள்ளார். அப்போது, தங்கவேல் தனக்கு பாரதியார்  பல்கலைக்கழகத்தில் தெரிந்த நபர்கள் இருப்பதாவும், அதன் மூலம் உங்கள் மகனுக்கு வேலை வாங்கித் தரு கிறேன் எனவும் கூறியுள்ளார். அதற்கு முன்பணமாக ரூ.5  லட்சம் கேட்டுள்ளார். இதை நம்பிய ராமசாமி ரூ.5 லட்சத்தை தங்கவேலிடம் கொடுத்துள்ளார். அது மட்டு மின்றி ராமசாமி தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவி னர்கள் என 44 பேரிடம் ரூ.2 கோடிக்குமேல் வாங்கி  அவர்களுக்கும் அரசு வேலை வாங்கி கொடுக்கும்படி அந்தப் பணத்தையும் தங்கவேலிடம் கொடுத்துள்ளார். ஆனால், தங்கவேல் யாருக்கும் அரசு வேலை வாங்கிக் கொடுக்கவில்லையாம். தான்  ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமசாமி ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதில்,  கோவை, வடவள்ளியில் இதேபோல அரசு வேலை வாங்கித் தருவதாக தங்கவேல் ரூ.29 லட்சம் மோசடி செய்ததும், இது தொடர்பாக போலீசார் அவரைக் கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தங்கவேல் மீது ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அணைகள் நிலவரம்

பவானி சாகர் அணை
நீர்மட்டம்: 56.03அடி(105)
நீர்வரத்து: 709 கனஅடி
நீர் திறப்பு: 155 கனஅடி
மழையளவு: 18.2 மிமீ
மேட்டூர் அணை
நீர்மட்டம் : 45.180 அடி
நீர்வரத்து:  286 கனஅடி
நீர்திறப்பு: 2100 கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:38.75/160 அடி
நீர்வரத்து:238.98கனஅடி
நீர் திறப்பு: 20 கன அடி
மழை அளவு:7 மி.மீ.
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:11.97/72 அடி
நீர்வரத்து: 93 கனஅடி
நீர் திறப்பு: 57 கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:78.15/120அடி
நீர்வரத்து:171 கனஅடி
நீர்திறப்பு:32 கனஅடி
திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:30.71/60அடி 
நீர்வரத்து:8கனஅடி
நீர்திறப்பு:28கனஅடி

சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

சேலம், ஜூன் 5- சென்னை தாம்பரம் - மங்களூரு இடையே சேலம், கோவை  வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜூன் 7 முதல் 30 ஆம் தேதி  வரை, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரத் தில் இருந்து நண்பகல் 1.55 மணிக்கு புறப்படும் தாம்பரம் - மங்க ளூரு வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06047) மறுநாள் காலை  6.55 மணிக்கு மங்களூரு ரயில் நிலையத்தைச் சென்ற டையும்.

மறுமார்க்கத்தில் ஜூன் 8 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை,  சனி மற்றும் திங்கள்கிழமைகளில் மங்களூருவில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்படும் மங்களூரு - தாம்பரம் சிறப்பு  ரயில் (எண்: 06048) மறுநாள் காலை 4.45 மணிக்கு தாம்ப ரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயில் காசர் கோடு, பையனூர், கண்ணூர், தலசேரி, வடகரை, கோழிக் கோடு, திரூர், ஷொரணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்த னூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட  ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

தனியார் நிறுவனத்தில் விபத்து: 4 பேர் காயம்

சேலம், ஜூன் 5- மேச்சேரி அருகே தனியார் நிறுவனத்தின் கிரேன் பிளாட் பார்ம் உடைந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 4 பேர் காயம டைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மேச்சே ரியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில், தங்கமா புரி பட்டணத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (45) என்பவர்  ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில், ஸ்கிராப் யார்டு பகுதியில் இவருக்குச் சொந்தமான கிரே னில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். கிரேனை தூதுரெட்டியூரைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்ப வர் இயக்கியுள்ளார். பெரிய சாத்தப்படியைச் சேர்ந்த சத்ய ராஜ் (39), செவலனூரைச் சேர்ந்த பிரவீன்குமார் (27),  ஒடிசா மாநிலம், பரம்புரியைச் சேர்ந்த முன்னா பெகாரா  (25) ஆகியோர் அப்பகுதியில் வேலை செய்து கொண்டி ருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக கிரேனின் பிளாட் பாரம் உடைந்து கீழே விழுந்தது. இதில் மணிகண்டன், சத்ய ராஜ், பிரவீன்குமார், முன்னா பெகாரா ஆகியோர் காய மடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இச்சம்பவம் தொடர்பாக மேச்சேரி காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





 

;