ஈரோடு, மே 15- பவானி அருகே புன்னம் ஊராட்சிக்குட்பட்ட நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட் டது புன்னம் ஊராட்சி. இங்குள்ள ஏடி காலனியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, குடிநீர் பிரச்ச னைக்கு தீர்வுக்காண வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பவானி தாலு காக்குழு சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைமை பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்ம னுவை பெற்றுக்கொண்ட அவர், அப்பகுதியில் இருக்கும் ஆழ்துளை கிணற்றை ஆய்வு செய்து, தண்ணீர் இருக்கும் பட்சத்தில் மேலும் இரண்டு குழாய்களை இறக்கி தண்ணீர் எடுக்கப்படும். அதுவரை வாகனங்கள் மூலமாக கொண்டு வந்து குடிநீர் தேவையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். முன்னதாக, இந்நிகழ்வில், விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகாச் செயலாளர் எஸ். மாணிக்கம், தாலுகாக்குழு உறுப்பினர் இந்திராணி உட்பட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.