விருந்து என்றவுடன் கண் முன்னே வரு வது வாழை இலை. பச்சை பசேலென்று இருக்கிற வாழை இலையை பரப்பி பதார்த் தங்களை அடுக்கினால், உப்பும், ஊறுகா யும் கூட உள்ளத்தை கிளரச்செய்யும். வாழை இலையின் வசீகரத்தில் மயங்கிய முந்தைய தலைமுறை கடந்து தற்போது பாக்கு மட்டை தட்டிற்கு அடுத்த தலை முறை தயராகியுள்ளது. பேப்பர், பிளாஸ்ட்டிக் தட்டு என்கிற அபாயத்தில் இருந்து விழித்துக்கொண்டு விடுபட்டு பாக்கு மட்டை தட்டுக்கு மாறி னாலும், விடாது கருப்பாய் பாக்கு மட் டைக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. பாக்கு மட்டை தட்டு செய்யும் தொழில் தற்போது அதிகரித்துள்ளது. குறைந்த முதலீடு, கூடுதல் உழைப்பு என் கிற சூத்திரத்தை அடிப்படையாக கொண்டு தற்போது ஏராளமான பாக்கு மட்டை தட்டு செய்யும் தொழில்கள் உரு வாகியுள்ளது. சின்ன சின்னதாய் குடும் பம் மொத்தமும சேர்ந்து உடல் உழைப்பை செலுத்தி ஆஹா ஓஹோ என்றில்லை என்றாலும், அன்றாடம் வயிற் றுப்பாட்டை போக்கி விடுகிறது இந்த பாக்கு மட்டை தட்டு தயரிரிக்கும் இத் தொழில். சுற்றுச்சூழலை பாதிக்காத வகை யில் பாக்கு மட்டை தட்டுகள் அதிகளவு தற்போது பொதுமக்கள்
இதன் வெளிப்பாடாக பல விதமான வடிவங்களில், பாக்கு மட்டை தட்டுகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பாக்கு மட்டை தட்டு உற்பத்தி செய்யும் சிறிய அளவி லான தொழிற்சாலைகள் இயங்கி வரு கிறது. கடந்த சில மாதங்களாக பாக்கு மட்டை தட்டு தயாரிப்பதற்கான, மூலப் பொருட்கள் சரி வர கிடைக்காததால், சீசன் காலத்தில் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ள தாக பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு உரிமை யாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பாக்கு மட்டை தட்டு தயா ரிக்கும் குணசேகரன் என்பவர் கூறுகை யில், கடந்த காலங்களை காட்டிலும் தற் போது அனைத்து தரப்பு பொதுமக்களிட மும், பாக்கு மட்டை தட்டு நல்ல வர வேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து பாக்கு மட்டை தட்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்கிறது. வழக்கமாக பயன் படுத்தி வரும் வாழை இலையில் இதைக் காட்டிலும் அதிக உடல் நலன் மிகுந்த பல காரணங்கள் இருந்தாலும், தொடர்ந்து நாளுக்கு நாள் விவசாயத்தில் ஈடுபடு வோர் மற்றும் விவசாயப் பணிகள் குறைந்து வருவதால், வாழைமரம் சார்ந்து விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. தேவை அதிகரித்தும் வாழை இலை முன்பு போல சரிவர கிடைப்பதில்லை. அதனால் பலரும் தற்போது பாக்கு மட்டை தட்டுகளை வாங் குவதையே விரும்புகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேடி அலைந்தாலும், பாக்கு மட்டை தட்டு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் கிடைப் பதில்லை. கிருஷ்ணகிரி, கர்நாடகா உள் ளிட்ட பகுதிகளிலிருந்து தான் பாக்கு மட் டைகளை வாங்குகிறோம். முன்பு 3 ரூபாய்க்கு விற்று வந்த பாக்கு மட்டை, தற் போது 4 முதல் 5 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிபாளையம் சுற்று வட்டார பகுதியில் ஒரு சிலர் மட்டுமே பாக்கு மட்டை தட்டு தயாரிப்பில் ஈடுபட்ட நிலை யில், தற்போது புதிதாக பலரும் சிறிய அள விலான உற்பத்தி கூடங்களை இயக்கி வருவதால், இதிலும் போட்டி ஏற்பட்டு பாக்கு மட்டைக்கு டிமாண்ட் அதிகரித்துள் ளது. அதனால், முன்பை போல எங்களால் பாக்கு மட்டைகளை உடனடியாக வாங்கி தட்டு தயாரிக்க முடியவில்லை. அதுபுறமிருக்க கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு பெய்த மழையின் கார ணமாக பாக்கு மட்டைகளை நன்கு காய வைக்க முடியாமல், ஈரப்பதத்தோடு இருந் ததால் தொழில் பாதிப்பு ஏற்பட்டது. தற் போது சபரிமலை சீசன் மற்றும் பழனி மலை பக்தர்கள் பாதயாத்திரை பயணம், உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் தைப் பொங்கல் உள்ளிட்ட பல்வேறு விசேஷ காரணங்களுக்காக முன்பை காட்டிலும், தற்போது பாக்கு மட்டை தட்டு தேவை அதிகரித்துள்ளது. வழக்கமாக பாக்கு மட்டை தட்டுகளை வாங்கும் வாடிக்கையா ளர்கள் மூலப்பொருட்களின் விலை ஏற் றத்தை எடுத்துக்கூறி, நாங்கள் தட்டுகளின் பாக்கு மட்டை தட்டுகளின் விலையை ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் ஏற்றி கூறி னால் கூட வாங்க மறுக்கிறார்கள். பழைய விலையிலே தட்டுகள் வேண்டும் என்ப தால் நாங்கள் தொழில் பாதிப்பை சந் தித்து வருகிறோம்.
எனவே, சிறிய அளவிலான தொழிற் சாலைகளை, தொழில் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்கு மட்டைகள் குறைந்த விலையில் கிடைப்பதற்கு ஏதேனும் உதவி செய் தால் பொருத்தமாக இருக்கும் என குண சேகரன் தெரிவித்துள்ளார். தற்போது கணி சமாக சிறிய அளவிலான ஒரு தட்டு மூன்று ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை, அளவுக் கேற்ற போல் விற்பனை செய்யப்பட்டு வரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது. -மா.பிரபாகரன், பள்ளிபாளையம்