districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அடிப்படை வசதி கோரி  சேலம் மேயரிடம் சிபிஎம் மனு

அடிப்படை வசதி கோரி  சேலம் மேயரிடம் சிபிஎம் மனு சேலம், ஜுலை 2 - சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சேலம் மாநகராட்சி மேயரிடம் மார்க் சிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று மனு அளித்தனர். சேலம் மாநகராட்சி 5ஆவது கோட்டத்தில் சமூதாய கூடம்  அமைத்திடவும், ஊர் பொதுக்கிணறு தூர்வாரிடவும், சாக்கடை  வசதியை சீரமைக்கவும்,அதேபோல் 26ஆவது கோட்டத் தில் 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்த புங்கை மரங்களை வெட் டியவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சேலம் மாந கராட்சி மேயர் மற்றும் துனை ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று மாநகரச் செயலாளர் என். பிரவீன்குமார் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.

மளிகை கடையை சேதப்படுத்திய யானை!

மளிகை கடையை சேதப்படுத்திய யானை! கோவை, ஜூலை 2- மருதமலை அருகே குடியிருப்புப் பகுதியில் செவ்வாயன்று  அதிகாலை காட்டு யானை மளிகைக் கடையை உடைத்து உள்ளே இருந்த உணவு பொருட்களை சாப்பிட்டு சென்ற சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து, வனவி லங்குகள் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது  அன்றாட நடவடிக்கையில் ஒன்றாக மாறியுள்ளது. உணவு  மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வலம் வந்து  கொண்டிருந்தன. இந்நிலையில், செவ்வாயன்று அதிகாலை  மருதமலை அருகே உள்ள ஐஓபி காலனி குடியிருப்பு பகுதிக் குள் காட்டு யானை ஒன்று உலா வந்தது. பின்பு அந்த காட்டு  யானை அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையின் ஷட்டரை  உடைத்து உள்ளே நுழைந்தது. மேலும், கடையில் இருந்த  அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட் களை உட்கொண்டு யானை சென்று விட்டது.  காலையில் கடையை திறக்க வந்த மளிகைக் கடைக்காரர்  ஷட்டர்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்து கிடப் பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வனத்துறையி னருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், வனத்துறையி னர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

மூடப்பட்ட கவியருவி மீண்டும் திறப்பு

மூடப்பட்ட கவியருவி மீண்டும் திறப்பு பொள்ளாச்சி, ஜூலை 2- கன மழையின் காரணமாக கவியருவி செல்ல சுற்றுலாப்  பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்த நிலை யில், மழை பொழிவு குறைந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள்  செல்ல புதன்கிழமை முதல் அனுமதிக்கப்பட உள்ளதாக அறி வித்தனர்.  தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில்,  ஆழியார் கவியருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பு  வேலிகள் சேதமடைந்தது. இதனால், சுற்றுலாப் பயணிக ளின் பாதுகாப்பை கருதி கொண்டு வனத்துறையினர் ஆழி யார் கவியருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலி கமாக தடை விதிப்பட்டு இருந்ததனர். இந்நிலையில், தற் போது வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் உத்தர வின்படி தற்காலிகமாக மூடப்பட்ட ஆழியார் கவியருவிக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் செல்ல புதனன்று (இன்று) முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

போலீசாரை தாக்கிய மூன்று பேர் கைது

போலீசாரை தாக்கிய மூன்று பேர் கைது கோவை, ஜூலை 2- அன்னூர் அருகே சாலையில் மது குடித்துக்கொண்டிருந்த வர்களை கண்டித்த போலீசாரை தாக்கிய மூன்று பேரை போலீ சார் கைது செய்தனர்.  கோவை மாவட்டம்,  அன்னூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் அழகுராஜா மற்றும் கார்த்தி கேயன். இவர்கள் திங்களன்று அன்னூர் சத்தி சாலையில் உள்ள பசூர் ஊராட்சிக்குட்பட்ட பொங்கலூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அங்கு மூன்று இளைஞர்கள் சாலை ஓரத்தில்  நின்று மது குடித்துக் கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த  போலீசார் இங்கு நின்று மது குடிக்க கூடாது இங்கிருந்து செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதனால், போலீசாருக்கும் வாலிபர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர், மூவரும் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து, அன்னூர் காவல்நிலையத்திற்கு தகவல்  தெரிவித்த நிலையில், அங்கு வந்த கூடுதல் போலீசார், போலீ சாரை தாக்கி மூன்று பேரையும் பிடித்து காவல் நிலையம்  அழைத்து வந்தனர். இது குறித்த விசாரணையில், அவர்கள்  கிருத்திக், ஈஸ்வரன், பிரதீஷ் என்பதும் இவர்கள் மூவரும்  பொங்கலூர் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவ னங்களில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதனைய டுத்து, மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த  போலீசார் அன்னூர்  நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

வெள்ளத்தில் மூழ்கிய பாலம் - போக்குவரத்து பாதிப்பு

வெள்ளத்தில் மூழ்கிய பாலம் - போக்குவரத்து பாதிப்பு உதகை, ஜூலை 2-  முதுமலை தெப்பக்காடு தரைப்பாலம் மாயாறு ஆற்று வெள்ளத்தில் மூழ்கியதால், தெப்பக்காடு - மசினகுடி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம, முதுமலை, தெப்பக்காடு அருகே, மசி னகுடி சாலையில் மாயாறு ஆற்றின் குறுக்கே, உள்ள சேத மடைந்த பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் கட்டும் பணி,  இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதனால்,  வாகன போக்குவரத்துக்கு, வனத்துறைக்கு சொந்தமான, தற் காலிக சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இப்பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும், புதிய பாலம் கட்டும்  பணி இதுவரை நிறைவு பெறவில்லை.  இந்நிலையில், முதுமலை மாயாறு ஆற்றில், திங்க ளன்று திடீரென பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில், தற்கா லிக சாலையில் உள்ள பாலம் மூழ்கியது. இதனால், தெப்பக் காடு - மசினகுடி இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட் டது. இதனால், பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப் பட்டதால், தெப்பக்காடு யானைப்பாடி கிராமம் மற்றும் மாயார், சிங்கார, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பல கிராமங்க ளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.  இப்பாலத்தில் ஏற்பட்ட அடைப்பை நெடுஞ்சாலை துறை யினர் ஜே.சி.பி மூலம் அகற்றினர். பின்னர்,  மாலை பாலத்தின் மீது மழை வெள்ளம் செல்வது குறைந்ததை  தொடர்ந்து, வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். “மழைக்காலத்தில் தொடரும் இப்பிரச்சனைக்கு, புதிய  பாலம் கட்டும் பணியை, விரைந்து முடிந்து அதில் போக்கு வரத்தை துவங்குவதே தீர்வாகும்” என, ஓட்டுநர்கள் தெரி வித்தனர்.  இதனிடையே, உதகை தேவர் சோலை பேரூராட்சிக்கு உட் பட்ட குச்சி முச்சி பகுதியில் தொடர் கனமழை காரணமாக குடி யிருப்பை மழை வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதியில் உள்ள  மக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வா கம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

யானை தாக்கி காயமடைந்த தொழிலாளி உரிய சிகிச்சை அளிக்கக் கோரி மறியல்

உதகை, ஜூலை 2- பந்தலூரை அடுதத கவுண்ட கொல்லி பகு தியில் யானைத்தாக்கி காயமடைந்த  தொழி லாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோரி  பழங்குடியினர் மற்றும் பொதுமக்கள் செவ் வாயன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவர்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக  கன மழை பெய்து வருகிறது. இதனால், அப் பகுதி பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள் ளாகி உள்ளனர். மழையின் காரணமாக மின் தடை ஏற்பட்டு பெரும் பாலான கிராமங்கள்  இருளில் மூழ்கியது. இதனால், வனவிலங்கு கள் கிராமங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளது.  இந்நிலையில், கடந்த இரண்டு நாட்க ளுக்கு முன்பு தேவர் சோலைக்கு உட்பட்ட  கவுண்ட கொல்லி பகுதி உள்ள பழங்குடி யினத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜான்(35), என்பவரை யானை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை  அங்கிருந்து மீட்டு உதகை அரசு தலைமை  மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காயமடைந்த ஜானுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறப்படு கிறது. இதனால், அப்பகுதி பழங்குடியின பொதுமக்கள், யானை தாக்கி காயமடைந் தவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்  என்றும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு  நிவாரண உதவிகள் வழங்கா ததை கண்டித்தும், மின்சார விநியோகத்தை சீராக்க வேண்டும், துண்டிக்கப்பட்ட குக் கிராம சாலைகளை உடனே சீரமைக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  பழங்குடியினர் செவ்வாயன்று தேவர் சோலை 4 ஆவது மைல் பகுதியில் மறியலில்  ஈடுபட்டனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பேரூராட்சிச் செயலா ளர் சிவசங்கள், பேரூராட்சித் தலைவர் வள்ளி  ஆகியோர் பழங்குடி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் உரிய  சிகிச்சை அளிப்பதை உறுதி செய்கிறோம். மின்சார விநியோகத்தை சீர் படுத்துகிறோம் உள்ளிட்ட உறுதிகளை அளித்தனர். இதனை யேற்று அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ரேசன் கடை முற்றுகை

ரேசன் கடை முற்றுகை சேலம், ஜுலை 2- ரேசன் கடைகளில் முறையாக பொருட்களை வழங்கா ததை கண்டித்து, சேலம் மணியனூரில் பொதுமக்கள் முற்று கையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சேலம் மணி யனூர் பகுதியில் அமைந்துள்ள அரசு நியாயவிலை கடையில்  கடந்த மூன்று மாதங்களாக பொருட்கள் வழங்கப்பட வில்லை. ஆனால் பொருட்கள் வாங்கியது போன்று செல் போனிற்கு குறுஞ்செய்தி வருகிறது. இதுகுறித்து புகார் தெரி வித்த பிறகு, விற்பனையாளர் கண்ணன் என்பவர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு பதிலாக கணேசன் என்ப வர் நியமிக்கப்பட்டார். இதனிடையே சஸ்பெண்ட் செய்யப் பட்ட கண்ணன் அதே அரசு நியாய விலை கடைக்கு வந்த போது பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயிலில் அடிபட்டு இருவர் பலி

ரயிலில் அடிபட்டு இருவர் பலி திருப்பூர், ஜூலை 2-  திருப்பூரில் தண்டவாளத்தைக் கடத்த முயன்ற இருவர்  ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனா்.  திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர்  ராஜ்குமர் (28), இவரின் நண்பர் சரவணபவன் (29). இருவ ரும், திருப்பூர் காவிலிபாளையம்புதூர் பகுதியில் தங்கி கட் டிட வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், திங்க ளன்று தேநீர் அருந்துவதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது, கோவையில் இருந்து ஈரோடு  வழியாகச் சென்ற ரயில் மோதியதில் இருவரும் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு  வந்த திருப்பூர் ரயில்வே காவல் துறையினர் இருவரது சடலங் களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூர் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

தடை செய்யப்பட்ட புகையிலைப்  பொருள்கள் விற்பனை: ரூ.1 லட்சம் அபராதம்

தடை செய்யப்பட்ட புகையிலைப்  பொருள்கள் விற்பனை: ரூ.1 லட்சம் அபராதம் திருப்பூர், ஜூலை 2- பல்லடத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத்  துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.  பல்லடத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் கள் திங்களன்று உணவகங்கள், மீன் விற்பனை நிலையங்கள்,  வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில்,  தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட் டது. மேலும், உணவுப் பாதுகாப்புத் துறையின் விதிமுறை களைப் பின்பற்றாத 6 கடைகளுக்கு ரூ.19 ஆயிரம் அபராத மும், இரண்டு உணவங்களில் உணவுப் பொருள்கள் விற்ப னைக்குத் தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

உடுமலையில் நாளை மின்தடை

உடுமலையில் நாளை மின்தடை உடுமலை, ஜூலை 2- உடுமலைப்பேட்டை துணை மின் நிலையத்திற்குட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ள தால் ஜூலை 4 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல்  மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் தடைபடும் பகுதிகள்: உடுமலைப்பேட்டை நகரம், பழனிபாதை, தங்கமாள் ஓடை, இராகல்பாவி,சுண்டக்காம்பாளையம், ஆர். வேலூர்,  கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, பொட்ட யம்பாளையம், பொட்டிநாயக்கனுர், சோமவாரம்பட்டி, பெதப்பம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிச்சேரி, சின்ன வீரம்பட்டி, சங்கர்நகர், காந்திநகர் -2, ஜிவா நகர், அரசு கலைக்  கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, மற்றும் குறிச்சிக்கோட்டை பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பஞ்சாலை நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கு சிஐடியு  உள்ளிருப்புப் போராட்டம்

பஞ்சாலை நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கு சிஐடியு  உள்ளிருப்புப் போராட்டம் தருமபுரி, ஜூலை 2- தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளியில் உள்ள பிஎம்பி தனியார் பஞ்சாலை நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் உள்ளி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்குட்ட பாளை யம் புதூர் அருகில் பிஎம்பி தனியார் பஞ்சாலை நிர்வாகம்,ஊழியர் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தொழிலாளர்களை ஏமாற்றி ஆலையை மூடும் நடவடிக்கை மேற்கொண்டதை அறிந்து சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து, நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி மற்றும் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் மாவட்ட நிர்வாகி பி.ஆறுமுகம்,ஆலை சங்க நிர்வாகிகள் முருகன் வேலு ஆகியோர் தருமபுரி தொழிலாளர் நல அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆலை நிர்வாகம் உறுதியளித்ததின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

கலைஞர்கனவு இல்லத் திட்டத்திற்கு  ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்து

கலைஞர்கனவு இல்லத் திட்டத்திற்கு  ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்து தருமபுரி, ஜூலை 2-  கலைஞர் கனவு இல்லத் திட்டத்திற்கு ஊழியர் கட்ட மைப்பை ஏற்படுத்தக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலு வலர் சங்கத்தினர் திங்களன்று தருமபுரி ஊரக வளர்ச்சி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு கலைஞர் கனவு இல்லத் திட்டம் மற்றும் ஊரக வீடுகளை பழுதுபார்த்தல் திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும். கலைஞர் திட்ட இல்ல பயனாளர்கள் தேர்வு குறித்து திருத்தப்பட்ட வழிநெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகமது இலியாஸ், தலைமை வகித்தார்.மாநில துணைத்தலைவர் ஆர்.ஆறுமுகம் சிறப்புறையாற்றினார்.மாவட்டச் செயலா ளர் வெ.தர்மன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருங்கிணைப்பா ளர் ச.இளங்குமரன்,மாவட்டப் பொருளாளர் கே.வினோத்கு மார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன்,மாவட்ட செயலாளர் ஏ.தெய்வானை, ஜாக்டோ ஜியோ மாவட்ட நிதிகாப்பாளர் கே.புகழேந்தி ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் ஆட்சியர் தகவல்

உதகை, ஜூலை 2- தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக நீலகிரி ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இது குறித்து ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவித் திருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் 28 ஆம் தேதியன்று முதல் தொடங் கியது. இதனால், கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் தொடர்ந்து கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பாதிப்புக்குள்ளா னவர்களை மீட்டு 41 பேர் இரண்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் காலங்களில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உதகை, குன்னூர், கூடலூர் வட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் குழுவினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்படக் கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, இப்பகுதிகளைக் கண்காணிக்க 42 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களைக் கண்காணிக்கவும், 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.