திருப்பூர், செப்.27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா 12 ஆம் மாநாட்டில் தாலுகாச் செயலாளராக எம்.கணேசன் தேர்வு செய் யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா மாநாடு, காங்கேயம் தோழர் என். சங்கரய்யா நினைவரங்கில் (ஸ்ரீ ஹால் மண்ட பம்) வெள்ளியன்று நடைபெற்றது. தாலுகா குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, வின் சென்ட் தலைமையில் நடைபெற்ற இம்மா நாட்டில், குமாரசாமி செங்கொடி ஏற்றி வைத் தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் டி.ஜெயபால் மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். செயலாளர் திருவேங்க டசாமி அறிக்கை முன்வத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.மணிகண்டன் வாழ்த்தி பேசினார். இம் மாநாட்டில் எம்.கணேசன் தாலுகாக் குழு செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். எட்டு பேர் தாலுகாக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர் ஆகிய பகுதிகளில் காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டும், காங்கேயத்தில் இருந்து நேரடியாக சென்னைக்கு தினசரி பேருந்து இயக்க வேண்டும், தேங்காய் எண் ணெயை மலிவு விலையில் நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்ய வேண் டும், முத்தூர் பேரூராட்சியில் வேலை அட்டை வைத் துள்ள அனைவருக்கும் முறையாக வேலை வழங்க வேண்டும், வெறி நாய்களால் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் உயி ரிழப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், தெரு நாய்களை கட்டுப்ப டுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தீத் தாம்பாளையம் சமுதாய நலக் கூடத்தை உட னடியாக அமைத்து தர வேண்டும், ஒரத்துப்பா ளையம் அணையில் சாயக் கழிவுநீர் சேக ரமாவதை தடுத்து விவசாயத்திற்கு பயன்ப டும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டை நிறைவு செய்து வைத்து மாநில குழு உறுப்பி னர் கே.காமராஜ் உரையாற்றினார். இதில், மொத்தம் 52 பிரதிநிதிகள் பங்கேற்றனர். நிறை வாக எஸ்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறி னார்.