districts

img

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்து; நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்து

சேலம், ஜூலை 24 - மணிப்பூர் கலவரத்தை கட்டுப்ப டுத்து, மோடி அரசே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்து உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி  உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மணிப்பூர் ஜனநாயக படுகொலையை கண்டித்தும், பெண்கள் மீதான பாலி யல் கொடுமைகளை கண்டித்து கோவை சிவனந்த காலணி பவர்ஹவுஸ் முன்பு  மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு வின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் ஆர்.கோபால் தலைமை ஏற்றார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.தெய்வேந்திரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கண் டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங் கிரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று, மணிப்பூர் கலவரத்தில் அரசியல் ஆதா யம் தேடும் ஒன்றிய மோடி அரசை கண் டித்தும், மணிப்பூர் மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை ஏற்படுத்திடக்கோரி ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று, கோவை டாடாபாத் தில் ஒருங்கிணைந்த திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மாலதி நகராஜ் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்ட மண் டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர் கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கோவை ஒருங்கினைந்த நீதிமன்ற  நுழைவாயில் என் 4 முன்பு, அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் கூட்டமைப் பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அகில இந்திய வழக்கறிஞர்கள்  சங்க மாவட்டத் தலைவர் ராமர் தலைமை  வகித்தார். இதில், கோயம்புத்தூர் பார் அசோசியேஷன் தலைவர் கே.எம்.தண் டபாணி, மகளிர் வழக்கறிஞர்கள் அணி யின் ரேணுகாதேவி, திமுக வழக்கறி ஞர்கள் அணி தலைவர் அருள்மொழி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தின் மாநிலப் பொருளாளர் மாசே.துங்,  மாவட்டச் செயலாளர் ஜோதிகுமார், மு. ஆனந்தன், விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் துரை  இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர்கள் சி.வெண்மணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

சேலம்

சேலம் ஆத்தூர் பழைய,பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, தாலுகா குழு உறுப்பினர் எஸ். பிரபு தலைமை ஏற்றார். இதில், தாலுகா செயலாளர் ஏ.முருகேசன், தாலுக்கா  குழு உறுப்பினர்கள், சிஐடிவினர் திரளா னோர் பங்கேற்று, மோடி அரசிற்கெதி ரான கண்டன முழக்கங்களை எழுப்பி னர்.  இதேபோன்று, ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிற்சங்கம் (சிஐடியு) சார்பில் சேலம் ரயில்வே கூட்செட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் உதவித்தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். சுமைப் பணி சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர். வெங்கடாபதி, மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன், பொருளாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர். இதில் நிர்வாகிகள் கே.எம்.மாரி முத்து, முனுசாமி, சுப்பிரமணி, கோவிந் தராஜ், சங்கர் உள்ளிட்ட ரயில்வே ஏற்று மதி இறக்குமதி தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர். 

நாமக்கல்

மணிப்பூர் கலவரத்திற்கு காரண மான ஒன்றிய, மாநில பாஜக அரசுக ளைக் கண்டித்து நாமக்கல் மாவட்டம், ஆவரங்காடு பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கட்சியின் கிளை செயலாளர் தர்ம ராஜ் தலைமை வகித்தார். இதில் கட்சி  செயலாளர் ஆர்.ரவி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், மௌன போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் காந்தி சிலை  அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மு.தங்கராஜ் தலைமை ஏற்றார். இதில், மாவட்டச் செயலாளர் டி.சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நானிதா உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.  இதேபோன்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமி ழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில், நாமக்கல் கிழக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை செயலா ளர் தி.மணிமாறன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.

;