திருப்பூர், டிச.9 - திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர் பட் டியல் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி, ஐந்து நக ராட்சிகள், 14 பேரூராட்சிகளில் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 857 வாக்காளர்கள் இருப்பதாக பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வாக்காளர் பட்டியலை வெளி யிட்டார். மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற முறையில் திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் முன்னிலை யில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாநகராட்சியில் ஆண்கள் 3 லட்சத்து 62 ஆயி ரத்து 353 பேர், பெண்கள் 3 லட்சத்து 50 ஆயிரத்து 247 பேர், இதரர்கள் 170 பேர் உள்பட மொத்தம் 7 லட்சத்து 12 ஆயிரத்து 770 வாக்காளர்கள் உள்ளனர். இது தவிர, உடுமலை பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம், வெள்ள கோவில் ஆகிய ஐந்து நகராட்சிகளில் மொத்தமாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 241 ஆண்கள், 1 லட்சத்து 12 ஆயிரத்து 591 பெண்கள், இதரர்கள் 20 பேர் என மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 852 வாக்காளர்கள் உள்ளனர். 14 பேரூ ராட்சிகளில் 81 ஆயிரத்து 917 ஆண்கள், 86 ஆயிரத்து 311 பெண்கள், 7 இதரர்கள் ஆக மொத்தம் 1 லட்சத்து 68 ஆயி ரத்து 235 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று காலை 10.30 மணிக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே 10.30 மணிக்கு சிறிது நேரம் முன்னதாக அரசியல் கட்சியினரும், ஊடகத் துறையினரும் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்திற்குச் சென்றனர். ஆனால் அங்கு சென்றால், ஏற்கனவே 10.10 மணிக்கே மாவட்ட ஆட்சியர் அப்போது இருந்த சிலர் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். செய்தி மக்கள் தொடர்பு துறை பணியாளர் தவிர செய்தியாளர்களும் அப்போது அங்கு இல்லை. மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. வழக்கமாக வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வில் அரசியல் கட்சியினர் அது தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வதுடன், வாக்காளர் பட்டியல், வாக்குச் சாவடி, தேர்தல் நடைமுறை தொடர்பான தங்கள் புகார்களையும் நேரடியாக ஆட்சியரிடம் தெரிவிப்பது வாடிக்கை. அதுபோல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் தொடர்பான பல குளறுபடிகளைத் தெரிவிக்கவும் உரிய விபரங்களுடன் அரசியல் கட்சியினர் வந்திருந்தனர். ஆனால் அதை நேரடியாகத் தெரிவிப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது என்றும் தேர்தல் தொடர்புடைய அலுவலர்களிடம் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அத்துடன் குறித்த நேரத்துக்கு முன்பாக, அரசியல் கட்சியினரிடம் முறையான தகவல் கூட தெரிவிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து பட்டியலை வெளியிட்டது அவமரியாதை செயலாகவும் உள்ளதாக ஆட்சியர் மீது குற்றம் சாட்டினர். அங்கிருந்த அதிகாரிகள் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளிடம் சமாதானம் சொல்லி, இனிமேல் உரிய முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் உறுதி கூறினர்.