உடுமலை, பிப்.15 - அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் உடுமலைப்பேட்டை கிளை சார்பாக தொடர்ச்சியாக 11 வாரங்கள் நடைபெற்றது. இதன் நிறைவு வகுப்பு சனியன்று உடுமலை பசுபதி வீதியில் அமைந்துள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு நடை பெற்ற 11 வார இறுதி பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் 10.30 மணி வரை மாணவர்களுக்கு மாதிரி தேர்வு ஓஎம்ஆர் சீட் மூலம் நடைபெற்றது. இதில் 69 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். பாடப்பகுதிகளை கிளுவன்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் நடத்தி னார்கள். மேலும் பாடங்களில். படிப்பறிவுத் திறன் (எஸ்ஏடி) சார்ந்து பயிற்சியும், ப்ரொஜெக்டர் மூலம் வினாக்களுக் கான விடைகள் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இன்றைய பயிற்சி வகுப்பிற்கு 15க்கும் மேற்பட்ட பள்ளிக ளில் இருந்து 69 மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உடுமலை கிளை சார்பில் நடைபெற்ற வகுப்புகளில் பயிற்சி பெற்ற மாணவர்கள் அடுத்த வாரம் நடை பெற உள்ள தேர்வில் கலந்து கொள்ளவுள்ளார்கள். பயிற்சி வகுப்பினை ஆசிரியர்கள் செல்லத்துரை, ஈஸ்வரசாமி, உமா மகேஷ்வரன், சந்திரசேகர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்.