கோவை - சின்னவேடம்பட்டியில் மெட்டல்வர்ஸ், நிறுவ னத்தின் இருசக்கர வாகனத்தின் உதிரி பாகங்கள் மற்றும் கியர்ஸ் ஸ்டோரின் உற்பத்தி நிறுவனத்தின் திறப்புவிழா நடை பெற்றது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் திறந்து வைக்க, பிரபல மலையாள திரைப்பட நடிகர் ஸ்ரீஅமித் சக்கலக்கல் மெட்டல்வர்ஸ் இலட்சினையை (லோகோ) வெளியிட்டார். கோவை மாநகர உதவி போக்கு வரத்து பிரிவு ஆணையர் வி.சரவணன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர். இந்நிகழ்வில், மெட்டல்வர்ஸ், நிறுவனத்தின் இயக்குநர்கள் வினு, அனு, முர்ஷித், ஷிஹாஸ் மற்றும் வி.எம்.மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.