அவிநாசி.டிச.5- அவிநாசி அருகே சேவூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஞாயிறன்று நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி சேவூர் பேருந்து நிறுத்தம் அருகே அனுசரிக்கப்பட்டது. சேவூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.வேலுசாமி தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு அவினாசி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெகதீசன் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் சின்னக்கண்ணு,குப்புசாமி, ராஜேந்திரன் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.