districts

img

பெண்ணுரிமை போராளி தோழர் மைதிலி சிவராமன் நினைவு தினம்

கோபி, மே 30- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவ ரான தோழர் மைதிலி சிவராமனின் நினைவு தினம் வியாழனன்று அனு சரிக்கப்பட்டது.  தனது வாழ்நாள் முழுவதும் பெண்களின் மேம்பாட்டிற்க்காக அர்ப்பணித்தவர் தோழர் மைதிலி சிவ ராமன், தஞ்சை கீழ்வெண்மணி படு கொலை குறித்த விவரங்களை உலக கவனத்திற்கு கொண்டு சேர்த்ததில் இவரது பங்கு உண்டு. மேலும் வாச் சாத்தி வன்கொடுமை சம்பவத்தை அறிந்து நேரில் சென்று உண்மை களை கண்டறிந்து ஆவணப்படுத்தி யவர்.  இவரது நினைவு தினம் வியாழ னன்று பல்வேறு பகுதிகளில் அனுச ரிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் கோபியில் மைதிலி சிவராமன் நினைவு சிறப்பு கருத்தரங் கம் நடைபெற்றது.  கோபி செட்டிபாளை யத்தில் ஜோதிபாசு நினைவரங்கத் தில், அனைத்திந்திய ஜனநாக மாதர் சங்கம் சார்பில் இந்த சிறப்பு கருத்த ரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலை வர் பிரசன்னா முன்னிலையில் நடை பெற்றது இக்கூட்டத்தில் மாவட்டச்  செயலாளர் பா.லலிதா, மாவட்ட  துணைச்செயலாளர் மல்லிகா, மாநில செயற்குழு உறுப்பினர் பவித்ரா  தேவி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். முன்னதாக, கருத்தரங் கில் சிறப்பு அழைப்பாளராக பங் கேற்ற மாதர் சங்க மாநில துணைச் செயலாளர் எம்.கிரிஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முடி வில் மாவட்டப் பொருளாளர் கீதா நன்றி கூறினார்.  தருமபுரி இதேபோன்று, பெண்ணுரிமை போராளி தோழர் மைதிலி சிவரா மன் நினைவுதினத்தை முன்னிட்டு, தருமபுரியில் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் சார்பில் அவ ரது உருவப்படத்துக்கு மாலை அணி வித்து, மலர்தூவி மரியாதை செலுத் தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸா மேரி, மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி, கே.சுசிலா, ஒன்றியச் செயலாளர் எம். மீனாட்சி, ஒன்றியத் தலைவர் தமிழ் மணி, நகரச் செயலாளர் எஸ்.நிர்மலா ராணி, நிர்வாகிகள் மாது, ரங்கநாயகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;