கோவை, செப்.28 - மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மேற்கு நகரக்குழு மூத்த தோழர் பி.நடராஜன் புதனன்று காலமானார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மேற்குநகரக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், ம.ந.கவீதி சிபிஎம் கிளை முன்னாள் செயலாளருமான தோழர் பி.நடராஜன் (76) வயது மூப்பின் காரணமாக காலமானார். இவரின் மறைவு செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கட்சியின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், மேற்கு நகரக்குழு செயலாளர் பி.சி.முருகன் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.