காலமானார்
கோவை, ஜூன் 12- கோவை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி செந்தில் அண்ணா அவர்களின் தந்தையார் எல்.ஆறுமுகம் வயது மூப்பு மற் றும் உடல் நலக்குறைபாடு காரண மாக காலமானார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார் குடியைச் சேர்ந்தவர் எல்.ஆறுமுகம் சோழகர்(88). 1952 ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினரான இவர், மன்னார்குடி நகர்மன்ற உறுப்பினராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரிகளின் தாக்குதல்களை முண்டாசு கட்டியபடி தீரத்துடன் முறியடித்ததால், முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியால் முண்டாசு சேப்பையன் என அழைக்கப்பட்டவர். இவர், கடந்த ஜூன் 10ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார். இவருக்கு கோவை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளராகப் பணியாற் றும் ஆ.செந்தில் அண்ணா மற்றும் செந்தில் கருணா ஆகிய இரு மகன்களும், செந்தாமரை, செந்தில் குழலி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். எல்.ஆறுமுகம் அவர்களின் மறை விற்கு தீக்கதிர் நாளிதழின் சிறப்பு ஆசிரியர் மதுக்கூர் ராம லிங்கம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மில்லிங் செய்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சம்
திருப்பூர், ஜூன் 12- ‘மில்லிங்’ செய்த சாலைகள் நீண்ட நாட்கள் ஆகியும் தார்ச்சாலை போடப்படாததால் வேறு வழியின்றி சாலையை பயன்படுத்தும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத் தில் சிக்குகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை, தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டது. நகரப்பகுதி யில் சாலை அமைக்கும் போது, கடைகள் மற்றும் வீடுகள் தாழ் வாக மாறி, மழைநீர் புகும் அபாயம் உள்ளது. இந்நிலையை தவிர்க்க, நெடுஞ்சாலை சலையை அடுக்கடுக்காக அமைக் காமல், பழைய சாலையை தோண்டியெடுத்து (மில்லிங்), தார்ச்சாலை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து, சாலையை கீற்றுகளாக தோண்டி எடுக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மில்லிங் செய்யப் பட்ட சாலைகள் உடனுக்குடன் புதிய சாலை அமைக்கப்படுவ தில்லை. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்படுவதால், வாகன ஓட்டிகள் வேறு வழியின்றி இச்சாலையை பயன் படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு செல்லும் இருசக்கர வாகனங்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படு கிறது.
பல பகுதிகளில் இதேபோன்ற நிலை உள்ளது. பல்ல டம் – மங்கலம் சாலை, 63 வேலம்பாளையம் அருகே, சாலையை ‘மில்லிங்’ செய்து நீண்ட நாட்களாக பணி துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன்காரண மாக, அவ்வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதேபோன்று மில்லிங் செய்த பிறகு அப்ப டியே நீண்ட நாட்களுக்கு விட்டுச்செல்வதால், வாகன ஓட்டி கள் விபத்தில் சிக்குவதும், வாகனத்தின் டயர்கள் சீக்கிரம் தேய்ந்து சேதமடைவதாக வாகன ஓட்டிகள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.
ஆமை வேகத்தில் நடைபெறும் சாலைப்பணி
நாமக்கல், ஜூன் 12- குமாரபாளையத்தில் ஆமை வேகத்தில் நடை பெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணியால், அப் பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின் றனர்.
நாமக்கல் மாவட்டம், குமா ரபாளையம் பேருந்து நிலை யம் அருகே உள்ள கத்தாள பேட்டை பகுதியில், தார்ச் சாலை அமைக்கும் பணிக்காக, நீண்ட நாட்களுக்கு முன்பு, ஜல்லிகள் போடப்பட்டன. ஆனால், அதற்கான பணிகள் முடிய காலதாமதம் ஆவதால், நடந்து செல்வோர், வாகனங் களில் செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விசைத்தறி தொழிற்சாலைகள் இப்பகுதியில் அதிகம் இருப்ப தால், நூல்கள் கொண்டு செல்லவும், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்களை எடுத்து வரவும் டெம்போக்கள் கூட செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.