கோவை, மே 23- தையல் கலைஞர்களுக்கு மானி யத்துடன் கடன் வழங்க வேண்டும் என சிஐடியு தையல் கலைஞர்கள் சங்க கோவை மாவட்ட ஆண்டு பேரவை வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தையல் கலைஞர்கள் சங்க கோவை மாவட்ட 12 ஆவது ஆண்டு பேரவை ஞாயிறன்று கண பதிபுதூர் சிஐடியு இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் ஆர்.மனோகரன் தலை மையில் நடைபெற்றது. சிஐடியு மாநில செயலாளர் கே.ரங்கராஜ் பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார். செயலாளர் ஆர். வேலுசாமி, பொருளாளர் கு.லலிதா ஆகியோர் அறிக்கையை முன் வைத்து பேசினர். இதைத்தொ டர்ந்து சங்கத்தின் கௌரவ தலைவ ராக ஆண்டாள், தலைவராக ஆர். மனோகரன், பொதுச்செயலாளராக ஆர்.வேலுசாமி, பொருளாளராக கு.லலிதா உள்ளிட்ட 14 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்ந்தெடுக் கப்பட்டது. பேரவையை நிறைவு செய்து சிஐடியு மாவட்ட துணை செயலாளர் கே.ரத்தினகுமார் உரை யாற்றினர். முன்னதாக, இப்பேரவையில் தையல் கடைகளுக்கு சலுகை கட்ட ணத்தில் மின்சாரம் வழங்க வேண் டும். தொழில் விரிவாக்கம் செய் திட மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். கார்மென்ட்ஸ் தொழிலாளர்க ளுக்கு 8 மணி நேர வேலை, பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சமூக பாது காப்பை உறுதிப்படுத்த வேண் டும். கட்டுமானம், ஆட்டோ தொழி லாளர் நல வாரியத்தில் தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட அளவிற்கு தையல் வாரியத்திற்கும் உதவித் தொகை உயர்த்தி வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.