districts

img

தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு - சிஐடியு ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 13- தூய்மை பணியில் தனியார் மயத்தை புகுத்துவதை கண்டித்து, சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாச்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் கோவை, சேலம் பகுதிகளில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, ஊரக வளர்ச்சி சங்கத்தின்  மாவட்டத் தலைவர் ராஜாகனி, பொதுச் செயலாளர் கே.ரத்தின குமார் மற்றும் சிஐடியு நிர்வாகிகள், ஆர்.ராஜன், சி.துரைசாமி, சரவணன்  உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற் றனர். இதில், திரளான தூய்மைப் பணி தொழிலாளர்கள் பங்கேற் றனர். சேலம் இதேபோல், தூய்மை பணியா ளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக் கும் அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி சேலம் மேட்டூர், சின்ன பார்க் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு  கிளை செயலாளர் கருப்பண்ணன் தலைமை ஏற்றார். மாநிலக் குழு  உறுப்பினர் ஆர்.வெங்கடபதி,  மாவட்டப் பொருளாளர் வி.இளங் கோ உள்ளிட்ட திரளான தூய்மை  பணியாளர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர்.