districts

உரிய விசாரணையின்றி நலவாரிய மனுக்கள் தள்ளுபடி - கோட்டாட்சியரிடம் சிஐடியு மனு

தாராபுரம், டிச.21-  தாராபுரத்தில் உரிய விசாரணை இன்றி நலவாரிய  மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி கோட்டாட்சியரிடம் சிஜடியு சார்பில் மனு அளிக் கப்பட்டுள்ளது. தாராபுரம் தாலுகா பொதுத்தொழிலாளர் சங்க (சிஐ டியு) தாலுகா செயலாளர் பி.பொன்னுச்சாமி, கோட்டாட் சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, அமைப்பு சார தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் தொழிலாளர்கள் ஓரளவு பாதுகாப்பு மற்றும் பலன்களை பெற்று வருகின்ற னர். தற்போது, சிஐடியு சார்பில் சேவை மனப்பான்மை யோடு தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் நல வாரிய பதிவுகளை ஆன்லைன் மூலம் செய்து வருகிறோம். தற்சமயம் கொரோனா மற்றும் வெள்ள பாதிப்புகளை யொட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்வ தற்காகவும், புதுப்பிப்பதற்காகவும் அதிகளவு வருகின்ற னர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் செய்யும் பதிவுகளைச் சரிபார்ப்பதற்காக நலவாரிய அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆனால், தாராபுரம் வட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் முறையான எந்த விசாரணையுமின்றி, எந்த காரணமும் இல் லாமல் தகுதியுள்ள பதிவுகளைக் கூட தள்ளுபடி செய்கின்ற னர். மேலும் ஏற்கனவே பழைய நடைமுறைப்படி நேரடி யாகச் சென்று அளிக்கப்பட்ட மனுக்களில் ஒப்புதல் கையெ ழுத்துப் போட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், ஆன் லைன் மூலம் பதிவு செய்யும்போது கையெழுத்துப் போடப் பட்டுள்ளதைக் கூட கவனிக்காமல், அந்த மனுக்களையும் சம் பந்தப்பட்ட அதே கிராம நிர்வாக அலுவலரே தள்ளுபடி செய்துவிடுகின்றனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள், தொழிலாளர்கள் தங்களிடம் நேரடியாக வந்து ஒப்புதல் பெற வேண்டும் என வற்புறுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்படுவதோடு, மன உளைச் சலுக்கும் உள்ளாகின்றனர். ஆகவே உரிய காரணமின்றி தொழிலாளர் பதிவு மனுக்களை தள்ளுபடி செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

;