districts

img

தரமான முகப்பு விளக்குகளை கொள்முதல் செய்திடுக

ஈரோடு, செப். 3 - அரசு போக்குவரத்து கழகத்தில் 3 ஆண்டு ஊதிய ஒப்பந்த காலத்தை 4  ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதை கண் டித்தும், மீண்டும் 3 ஆண்டுகளாக மாற்றி  அமைக்க வேண்டும் என சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க ஆண்டு பேரவை வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு ஈரோடு 33 ஆவது ஆண்டு பேரவை தோழர் கெ.வெங்கடா சலம் நினைவரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கே.மாரப்பன் தலைமை வகித்தார். உதவி தலைவர் எஸ்.இளங்கோவன் வரவேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம் துவக்கி உரையாற்றினார். பொதுசெய லாளர் டி.ஜான்சன் கென்னடி, பொருளா ளர் ஜி.பழனிசாமி ஆகியோர் அறிக் கையை முன்வைத்தனர். சம்மேளன உதவி செயலாளர்கள் பி.செல்லதுரை, வேளாங்கண்ணி ராஜ்,  சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், உதவி தலைவர் ஆர்.ரகுராமன், பன் முக தலைவர் என்.முருகையா, ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் தலைவர் பி.ஜெகநாதன், செயலாளர் எஸ்.ஜெய ராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தீர்மானங்கள்

போக்குவரத்து கழகத்தில் அனைத்து பிரிவிகளிலும் உள்ள பணி யாளர் பற்றாக்குறை நீடிக்கிறது. உட னடியாக புதிய பணியாளர் பணி நியம னம் செய்யப்பட வேண்டும். தரமான உதிரிபாகங்கள் வாங்க வேண்டும். பிஎஸ்4 ரக பேருந்துகளில் முகப்பு விளக்கு வெளிச்சம் மிகக் குறைவாக இருப்பதால் இரவு நேரங்களில் பாது காப்பாக இயக்குவதில் சிரமம் ஏற் படுகிறது. எனவே அதனை மாற்றி தர மான முகப்பு விளக்கை பொருத்த ஏற் பாடு செய்ய வேண்டும்  ஓய்வு பெறும் நாளன்றே அனைத்து பலன்களும் பணியாளர்களுக்கு வழங் கப்பட வேண்டும். உணவகத்தில் ஒப் பந்த அட்டவணைப்படி கான்ட்ராக்ட் முறையை நீக்கி, தரமான உணவு வழங்க வேண்டும். கழக பேருந்து களில் 50 விழுக்காடு மழை காலங்களில் ஒழுகிறது. இதனை நிர்வாகம் உடன டியாக சரி செய்ய வேண்டும். மிகைப் பணி ஊதியம் வழங்கும் போது ஒப் பந்தப்படி கணக்கிட்டு வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  

நிர்வாகிகள்

தலைவராக கே.மாரப்பன், செயலா ளராக டி.ஜான்சன் கென்னடி, பொருளா ளர் சி.அய்யாவு மற்றும்  21 பேர் கொண்ட  நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டனர். பேரவை நிறைவு செய்து சம்மேளன துணை பொதுசெயலாளர் எம்.கனக ராஜ் உரையாற்றினார்.