திருப்பூர், ஜூலை 15 - தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5ஆம் தேதிக் குள் ஊதியம் வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடம் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் வெள்ளி யன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடம் ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க (சிஐடியு) மாவட்ட செய லாளர் கே.ரங்கராஜ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தூய்மைப் பணியில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணி யாளர்கள், டிபிசி ஊழியர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அர சின் குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும். மாதந்தோறும் 5ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். இபி.எஃப், இ.எஸ்.ஐ பிடித்தம் செய்வதில் ஒப்பந்த நிறுவனங்களின் பங்குத்தொகைகள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தப்பட்டுள்ளது. மனுவைப் பெற்று கொண்ட திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். இதில், மாவட்டக் குழு உறுப்பினர் சங்கர் குமார், வாஞ்சி நாதன், ஓட்டுனர் ஜகன்நாதன், லோகு உள்ளிட்ட தூய்மை பணி, டிபிசி குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.