திங்கள், ஜனவரி 18, 2021

districts

img

அரசியல் சட்டத்திற்கு விரோதமான குடியுரிமைச் சட்டத் திருத்தம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு

புதுதில்லி, டிச.10- மோடி அரசு கொண்டுவந்துள்ள குடி யுரிமை சட்டத் திருத்த மசோதா, மக்கள வையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலை யில், முன்னதாக இந்த மசோதாவிற்கு, காங்கி ரஸ், இடதுசாரிகள், திமுக, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங் கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சி களின் தலைவர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். “மோடி அரசு கொண்டுவந்துள்ள குடி யுரிமை சட்டத் திருத்த மசோதா அரசிய லமைப்புச் சட்டத்தின் 14, 15, 21, 25, 26 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது”என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கண்டனம் தெரி வித்தார்.  மேலும், ‘மத அடிப்படையிலான பிரி வினைக்கு காங்கிரஸ்தான் காரணம்’ என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி யதற்கு பதிலளித்த மணீஷ் திவாரி, “1935ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த இந்து மகா சபா கூட்டத்தில் பேசிய சாவர்க்கர் தான், இரண்டு நாடுகள் கோட்பாட்டுக்கு அடித்தளமிட்டாரே தவிர, காங்கிரஸ் அல்ல” என்று சாடினார் திரிணாமூல் எம்.பி அபிஷேக் பானர்ஜி பேசுகையில், “சுவாமி விவேகானந்தர் இந்த மசோதாவைப் பார்த்திருந்தால் கடுமை யான அதிர்ச்சியடைந்திருப்பார். இந்தியா குறித்த விவேகானந்தரின் வரையறைக்கு எதிராக குடியுரிமைச் சட்டம் உள்ளது. இது இந்தியாவைப் பிளவுபடுத்துகிறது” என்று காட்டமாக விமர்சித்தார். “இந்த மசோதாவை, அரசியல மைப்புச் சட்டத்துக்கு எதிரானது” என்று ஏற்கெனவே எங்கள் கட்சியின் தலைவர் விமர்சித்துள்ளார். அந்த வகையில், நாங்கள் இந்த மசோதாவை எதிர்க்கிறோம் என்று பகுஜன் சமாஜ் எம்.பி அப்சல் அன்சாரி தெரி வித்தார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி நமோ நாகேஸ்வர ராவ் பேசுகையில், “மதச்சார்பற்ற கட்சி என்ற எங்களின் கொள் கைக்கு ஏற்ப இந்த மசோதாவை எதிர்க்கி றோம்” என்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் சுப்ரியா சுலே பேசுகையில், “மத்திய அரசு இந்த மசோதாவைத் மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்” என வேண்டு கோள் விடுத்தார்.

;