districts

img

விளை நிலத்தில் எரிக்கப்படும் ரசாயனக் கழிவுகள்

நாமக்கல், பிப்.21- குமாரபாளையம் அருகே விவசாய நிலத்தில் ரசாயனக்  கழிவுகள் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுவதால் பொது மக்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் - சேலம் நெடுஞ் சாலையில், அருவங்காடு என்ற பகுதி அமைந்துள்ளது. விவ சாய நிலங்கள் அதிகமுள்ள இப்பகுதியில் கடந்த சில தினங் களாக இரவு நேரத்தில் வாகனங்களில் வரும் அடையாளம் தெரியாத நபர்கள், ரசாயனக் கலவைகள் கொண்ட இரும்பு  பேரல்கள் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாக கழிவுகளை, விவ சாய நிலத்தில் வீசிவிட்டு தீ வைத்து செல்கின்றனர். இரவு நேரத்தில் கொழுந்து விட்டு எரியும் தீயிலிருந்து வெளிவரும் ஒருவித நச்சுத்தன்மை காரணமாக பெரும் புகை ஏற்பட்டு,  அது அருகிலுள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல், தோல்  அலர்ஜி, சுவாசிக்க முடியாமை போன்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்குள்ள குப்பைக் கழிவுகளை ஆய்வு செய்த  போது ஈரோட்டிலுள்ள தனியார் ஆலையிலிருந்து அந்த  குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவது தெரியவந்தது. எனவே, இதுகுறித்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சட்ட விரோதமாக ரசாயன பேரல்கள் மற்றும் கழிவு களை கொட்டி தீ வைக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.