திருப்பூர், அக். 11 – புரட்சியாளர் சே குவேராவின் நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று திருப்பூர் கே.வி.ஆர்.நகரில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்க ரத்த தானக் கழகத்தின் மூலம் ரத்த தானம் செய்யப்பட்டது. இங்குள்ள வி.கே.அப்பேரல்ஸ் வளாகத் தில் நடைபெற்ற இம்முகாமுக்கு வாலிபர் சங்க மாநகரத் துணைத் தலைவர் டி.ராஜா தலைமை ஏற்க, மாநகரக்குழு உறுப்பினர் எஸ்.கிஷன் வரவேற்றார். இதில் திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு ரத்தம் சேகரித்தனர். கருவம்பாளையம் அரிமா வி.மோகன்கு மார், சன்மார்க்க சங்க செயலர் பா.ஜீவா னந்தம், ஈரோடு பனியன் வியாபாரிகள் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் வி.கணேசன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். அருள், மாவட்டச் செயலாளர் செ.மணிகண் டன், இரத்த தானக்கழக மாவட்ட கன்வீனர் எஸ்.விவேக், சங்க தெற்கு மாநகரத் தலைவர் எஸ்.சரவணன், மாநகரச் செயலாளர் டி.நவீன் லட்சுமணன், மாநகரப் பொருளாளர் எம். ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி. ஜெயபால், வாலிபர் சங்க முன்னாள் மாவட் டத் தலைவர் பா.ஞானசேகர், மாதர் சங்க மாநகரச் செயலாளர் சி.பானுமதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் மொத்தம் 57 பேர் ரத்த தானம் வழங்கினர். நிறைவாக கருவம்பா ளையம் கிளைச் செயலாளர் ஆர்.சதீஸ்கு மார் நன்றி கூறினார்.