கோவை, ஏப்.17- பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்கிட வேண்டும் எனக் கோரி, பிஎஸ்என்எல் தொழிற்சங்க கூட்ட மைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்கிட கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாடு தழுவிய தொடர் போராட் டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். மகேஸ்வரன் தலைமை வகித்தார். என்எப்டிஇ முன்னாள் மாநில உதவிச் செயலாளர் ஏ. ராபர்ட், ஓய்வூதியர் சங்க அகில இந்திய அமைப்புச் செயலாளர் வெங்கட்ராமன், பிஎஸ்என் எல் ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.பாபு ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், பிஎஸ்என் எல் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அப்துல் முத்தலிப் நன்றி கூறினார்.