districts

img

ஆசிய வலு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற அவிநாசி மாணவர்

அவிநாசி, டிச.26- துருக்கியில் நடை பெற்ற ஆசிய சாம்பியன் ஷிப் போட்டியில், அவி நாசி மாணவர் வலு தூக் கும் போட்டியில் தங்கப்ப தக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவிநாசி காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். வலுதூக்கும் வீரர், பயிற்சியாளர். இவரது மகன் பிரபு (23), கோவை தனியார் கல்லூரியில்  பயின்று வருகிறார். வலு தூக்கும் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர் தனது தந்தையிடம் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் வென்று பதக்கங்களை பெற் றுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது, துருக்கி இஸ் தான்புல் நகரில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்று, வலு தூக்கும் போட்டியில்  74வது பிரிவில் 737.5 கிலோ எடை தூக்கி தங்கப்பதக் கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு அவி நாசி பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட் டோர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.