districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விவசாயியை கொலை செய்ய முயற்சி: குண்டர் சட்டத்தில் இருவர் கைது

நாமக்கல், அக்.2- நாமக்கல், புதன்சந்தையை அடுத்த கொளத்துபாளையம் அருகே உள்ள சேவாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (51). விவசாயியான இவரை கடந்த மாதம் 2 ஆம்  தேதி புதன்சந்தையில் இருந்து ஏளூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் முருகேசனை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி னர். இதில் முருகேசன் படுகாயம் அடைந்தார்.  இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முருகேசனின் வீட்டிற்கு அருகே உள்ள கோழிப்பண்ணை அதிபருடன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பெரம்பலூரை சேர்ந்த விஜயகுமார் (43), கல்குறிச்சி அஜித் (23) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி ஆட்சியருக்கு பரிந் துரை செய்தார்.  இந்த நிலையில் விஜயகுமார், அஜித் ஆகியோரை குண் டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டார். இதையடுத்து, மேற் கண்ட இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவு நகலை போலீசார் சேலம் மத்திய சிறையில் வழங்கினர்.

பிஎப்ஐ அலுவலகத்திற்கு சீல்

ஈரோடு, அக்.2- இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகள் 5 ஆண்டுகள் செயல்பட ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா  அமைப்புகளின் அலுவலகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு ஜின்னா வீதியில் செயல்பட்டு வந்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ஈரோடு மாவட்ட அலுவலகத்திற்கு கோட்டாட்சியர் எம்.சதீஷ்குமார் தலைமையில், வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், கிராம நிர் வாக அலுவலர் சதீஷ்குமார், வருவாய் ஆய்வாளர் விஜய குமார் ஆகியோர் சீல் வைத்தனர்.

பெண் கொலை: 2 பேர் கைது

உதகை, அக்.2- நீலகிரி மாவட்டம், குன் னூர் அருகே உள்ள உப தலை பகுதியைச் சேர்ந்த வர் மோசஸ் மனோகரன். இவருடைய மனைவி ஜோதி மணி (33). இதற்கிடையே அதேபகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மனைவி நிர்மலா (30)-விடம், ஜோதி மணி வட்டிக்கு பணம் வாங்கி யுள்ளதாக கூறப்படுகிறது. வட்டி பணம் கேட்டு   நிர்மலா, ஜோதிமணிக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகி றது. ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க முடியாததால், பணம் கொடுத்து விட்டதாக  ஜோதிமணி கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் நிர் மலா தனது கணவரின் தந்தை மணியுடன் சேர்ந்து ஜோதி மணியின் கழுத்தை நெறித்து கொன்று பிணத்தை வீட்டில் மறைத்து வைத்துள்ளனர். இதையடுத்து ஜோதிமணி யின் கணவர் மோசஸ் மனோ கரன் அருவங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்டு, மணி மற்றும் நிர்மலாவை காவல் துறை யினர் கைது செய்தனர்.

உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி நியமிக்க கிராம சபையில் தீர்மானம்

திருப்பூர், அக். 2 - அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாளான ஞாயிறன்று வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்றம் சார்பாக கிராம சபை  கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் அடுத்த தலைமுறையை  காக்க நீர்வழிப் பாதைகளில் பட்டா கொடுப்பதை தடுக்க  வேண்டும், பொது தடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற  வேண்டும். 2022 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப் படையில் அத்திக்கடவு குடிநீர் வழங்க வேண்டும். மாவட்ட  உரிமையியல் நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நீதிபதி  இல்லாமல் வழக்கு நடைபெறாமல் பொதுமக்கள் பாதிப்பு  அடைந்து கொண்டிருப்பதை உயர் நீதிமன்றம் உடனடியாக  தலையிட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உழவர் சந்தையில் அமைச்சர் ஆய்வு

தாராபுரம், அக்.2- தாராபுரம் உழவர் சந்தையில் ஆதிதிராவிடர் நலத்துறை  அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற் கொண்டார். தாராபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த  விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை காலை 5 மணி முதல் உழவர் சந்தைக்கு கொண்டு விற்பனை செய்வர். இந் நிலையில் விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் குறைகளை கேட்டறிவதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற் கொண்டார். அப்போது உழவர் சந்தைக்கு தினசரி விளைப் பொருட்களை கொண்டு வரும் விவசாயிகளுக்கு உரிய  விலை கிடைக்கிறதா? போக்குவரத்து வசதிகள் போது மானதாக உள்ளதா? வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா  என விவசாயிகளின் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.  பிறகு தினசரி காய்கனிகளின் விபரம் குறித்து  விவ சாயிகளின் வருகை பதிவேடு, உழவர் சந்தை வரும்  விவசாயிகளின் அடையாள அட்டை, உழவர் சந்தை  பணியாளர்களின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியதாவது, தாராபுரம் உழவர் சந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு  முன்பு  முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப் பட்ட மகத்தான திட்டமாகும். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த காய்கறிகளை இடைத் தரகர் இன்றி நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து  அதன் மூலம் லாபம் அடையவும் பொதுமக்களும் தரமான  காய்கறிகளை வாங்கி செல்லும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட திட்டமாக உள்ளது. இவை கடந்த அதிமுக ஆட்சி  காலத்தில் சரிவர செயல்படாமல் இடைத்தரகர்கள் ஆதிக்கத் தால் நலிவடைந்து வந்தது. தற்போது இதற்கு புத்துணர்ச்சி  ஊட்டும் வகையில் திமுக ஆட்சி செயல்படும். எனவே விவ சாயிகள் உழவர் சந்தை மூலம் தங்கள் விளைவித்த பொருள் களை கொண்டு வந்து விற்பனை செய்து பயனடைய வேண்டும் என கூறினார். ஆய்வின்போது கோட்டாட்சியர் குமரேசன், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், நகர மன்ற துணைத் தலைவர்  ரவிசந்திரன், நகராட்சி ஆணையாளர் ராமர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

உயர்த்திய மின் கட்டணம் செலுத்துவதில்லை: விசைத்தறியாளர்கள் முடிவு

திருப்பூர், அக்.2- தமிழக அரசு விசைத்தறிக்கு மின் கட்ட ணத்தை குறைக்கும் வரை, உயர்த்தி  அறிவித்த மின் கட்டணத்தை செலுத்துவ தில்லை என்று விசைத்தறியாளர்கள் முடிவு  செய்துள்ளனர். மின்கட்டணத்தில் மாற்றம் கொடுக் கிறோம் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவாதம் கொடுத்த பின்,  கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு  செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத் தினர் விசைத்தறி வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து வாபஸ் பெற்றனர். எனினும் இதுவரை விசைத்தறிக்கு மின்  கட்டணம் குறைப்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் மின் துறையில் இருந்து வர வில்லை. மேலும் விசைத்தறி கூட்டமைப்பில் தமிழக அரசிடம் இருந்து உத்தரவு வரும்  வரை புதிய மின் கட்டணத்தை கட்டுவதில்லை  என சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. எனவே விசைத்தறியாளர்கள் உயர்த்திய  மின் கட்டத்தினை செலுத்த வேண்டாம் என்று  கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமை யாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர். இது குறித்து திருப்பூர் அவிநாசி உள்ளிட்ட மின் வாரிய செயற்பொறியாளர்களிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கிராம சபையில் வாலிபர்கள் மனு

திருப்பூர், அக். 2- உடுமலை ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சியில் இந்திய ஜனநாயக வாலிபர்  சங்க உரல்பட்டி கிளை  சார்பில் மக்களின் அடிப் படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கோரி கிராம சபைக் கூட்டத்தில் மனு  கொடுத்து வலியுறுத்தப் பட்டது. வாலிபர் சங்க கமிட்டி  உறுப்பினர் கருப்புசாமி, கிளைத் தலைவர் சந்துரு தலைமையில் 30க்கும் மேற் பட்ட பெண்கள் உட்பட அணி  திரண்டுவந்து குட்டிய கவுண்டனூரில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மனு அளித்தனர்.  கட்டி முடிக்கப்பட்ட பொதுக் கழிப்பிடத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும். உரல்பட்டி சுடு காட்டில் தண்ணீர் வசதி, மின்வசதி, சுற்றுச்சுவர் வசதி களை ஏற்படுத்த வேண்டும்.  பாழடைந்து இடிந்து கிடக் கும் காத்திருக்கும் கூடத்தை இடித்து அப்புறப்படுத்தி புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும். சாக்கடைகளில் குழந்தைகள் தவறி விழுவ தால் மூடி அமைத்திட வேண்டும். கிராம நிர்வாக  அலுவலகம், தபால் அலுவ லகம், ரேசன்கடை செயல் படும் கட்டிடம் எந்நேரமும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. உடனடியாக அதைப் புதுப்பித்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் மனுவாக கொடுக் கப்பட்டன. 

அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: எஸ்பி பேட்டி

ஈரோடு, அக்.2- பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை  விடுத்துள்ளார். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பாவது, கடந்த 17ஆம் தேதி இரவு சத்தியமங்கலம் பேருந்து நிலைய பகுதி யில் பெரியாரின் 144வது பிறந்தநாள் விழா சுவரொட்டியில் அடையாளம் தெரியாத நபர்கள் காவி சாயம் ஊற்றியது தொடர்பாக திராவிட விடுதலை கழகம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் சுவ ரொட்டி அவமதிப்பு வழக்கில் பாஜக சத்தி நகர செயலா ளர் ஸ்ரீகாந்த் மற்றும் யோகேஷ் ஆகியோர் கைது செய்யப் பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி, கடம்பூர் பகுதிகளில் இந்துத்துவ அமைப்பினர் கடந்த 20 ஆம் தேதி கடையடைப்பு செய்தனர். அன்று கோட்டு வீராம்பாளையத்தி லுள்ள பேக்கரியை கல்வீசி தாக்கியுள்ளனர். இதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாஜக நகர செயலாளர் ஸ்ரீகாந்த், யோகேஷ், இந்து முன்னணி நகர துணை தலைவர் அச்சுதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள னர். இதில் தலைமறைவாக உள்ள சுதாகரை தேடும் பணி நடை பெற்று வருகிறது. மேலும், புளியம்பட்டி எஸ்ஆர்டி சந்திப்பில் மனித உயிருக்கு அபாயம் ஏற்படுத்தும்படி பெட்ரோல் ஊற்றி  டயரை எரித்த வழக்கில் கமருதீன் என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவ்வாறு ஈரோடு மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் தொடர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கோவை ஆட்சியர் அழைப்பு

கோவை, அக்.2- ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளிலுள்ள காலிப்பணி யிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளிலுள்ள காலி பணி யிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு பணி யாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் (பி) மற்றும் குரூப் (சி) பிரிவில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலி யிடங்களின் எண்ணிக்கை 20 ஆயிரம் ஆகும். இத்தேர்வுக் கான கல்வித்தகுதி பட்டப்படிப்பாகும். இத்தேர்வுகளுக்கான உச்சபட்ச வயது வரம்பு 01.01.2020 அன்றுள்ளபடி குறிப்பிட்ட  பதவிகளின் அடிப்படையில் 27, 30, 32 ஆகும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. இத்தேர்வுக்கு  அக்.8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.100. பெண்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. இதற்கான முதற்கட்ட தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்பட வுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்து இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என  கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

காந்தி ஜெயந்தி: விடுமுறை அளிக்காத 47 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

உதகை, அக்.2- நீலகிரி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 47 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தொழிலாளர்‌ ஆணையர்‌ அதுல்‌ ஆனந்த்‌, ஆணையின்படி குன்னூர் தொழிலாளர்‌ உதவி ஆணையர்‌ (அமலாக்கம்‌) தலைமையில்‌ நீலகிரி மாவட்டத்தில்‌ குன்னூர்‌, உதகை, கோத்தகிரி மற்றும்‌ கூடலூர்‌ பகுதிகளில்‌ இயங்கும் கடைகள்‌, வணிக நிறுவனங்கள்‌, உணவு நிறுவனங்கள்‌ மற்றும்‌ மோட்டார்‌ போக்குவரத்து நிறுவனங்கள்‌ ஆகியவற்றில்‌ தொழிலாளர்‌ துறை அலுவலர்களால்‌ காந்தி ஜெயந்தி தினமான ஞாயிறன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கடை நிறுவனங்கள்‌, உணவு நிறுவனங்கள்‌ மற்றும்‌ மோட்டார்‌ போக்குவரத்து நிறுவனங்கள்‌ ஆக மொத்தம்‌ 85 நிறுவனங்களில்‌ பணிபுரிந்த பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ முறையாக அளிக்காமல்‌ பணிக்கு அமர்த்தப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து முறையான விசாரணைக்கு பின்னர் 47 நிறுவனங்கள்‌ கண்டறியப்பட்டு அந்நிறுவனங்கள்‌ மீது 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தொழில்‌ நிறுவனங்கள்‌ (தேசிய பண்டிகைகள்‌ விடுமுறைகள்‌) சட்டம்‌ 1957 ஆம்‌ வருட உணவு நிறுவனங்கள்‌ சட்டம்‌ மற்றும்‌ விதிகள்‌ கீழ்‌ சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும்,‌ இதுபோன்று தொடர்‌ நடவடிக்கைகள்‌ அடிக்கடி நடத்தப்படும்‌. அதில் இதுபோன்ற முரண்பாடுகள் காணப்பட்டால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அதே சமயத்தில் இதே மாதிரி தொடர் தவறுகளில் ஈடுபட்டால் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என‌ தொழிலாளர்‌ உதவி ஆணையர்‌ கு.சதீஸ்குமார்‌ தெரிவித்துள்ளார்.

 

;