districts

img

தடகளப் போட்டிகள் துவக்கம்

நாமக்கல், மார்ச் 6- குமாரபாளையம் அருகே, தமிழ்நாடு, பாண்டிச் சேரியை சார்ந்த 536 பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் தடகளப் போட்டிகள் துவங்கியது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காப்பாளையத்தில் இயங்கும் தனியார்  (எக்ஸெல்) கல்லூரியில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச் சேரி மாநிலங்களைச் சேர்ந்த 536 பாலிடெக்னிக் கல்லூரி  மாணவ, மாணவிகள் மொத்தம் 11 மண்டலங்களில் நடை பெற்றது. இது 100 மீட்டர் 200 மீட்டர் 400 மீட்டர் மற் றும் 800 மீட்டர் ஆயிரத்து 500 மீட்டர் வாட்டர் பந்தயங்க ளில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், உள்ளிட்ட  போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் வந்தனர். இதில் சுமார் 960 மாணவ,  மாணவிகள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான போட்டிகள் தொடங்கியது. இந்த போட்டி மூன்று நாட்கள்  நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படுவர்.  இந்நிகழ்வை திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன் துவக்கி வைத்தார். குமாரபாளையம் எக்ஸெல் கல்லூரியின் தாளாளர் ஏ.கே  நடேசன், ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக்கல்வி குழும தாளாளர் விஜயகுமார் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.