கோவையில் நடைபெற்ற அடுத்தடுத்த விரும்பத்தகாத சம்பவத்தையடுத்து மாநகர காவல்துறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதில், கோவை மாநகர உளவு பிரிவு உதவி ஆணையராக இருந்த முருகவேல் மாற் றப்பட்டு அவருக்கு பதிலாக பார்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையரான முருகவேல் கோவை மாநகர உளவு பிரிவு உதவி ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது முருகவேல் கோவை மாநகர உளவு பிரிவு உதவி ஆணையர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக இருந்த பார்த்திபன், கோவை மாநகர உளவு பிரிவு ஆணையராக நிய மிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று சிங்காநல்லூர் சரக உதவி ஆணையராக இருந்த அருண், கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக நியமிக்கபட் டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை
கோவை, செப்.24- பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட ஒரு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர். கோவை நகரின் அமைதியை சீர்குலைப்ப வர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என கோவை மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் எச்சரித்துள்ளார். கோவை காந்திபுரம் விகேகே மெனன் ரோட்டில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த டுத்து கோவையில் மண்ணென்னை குண்டு கள் வீசப்பட்டது. இதில், யாருக்கும் காயமோ, சேதமோ ஏற்படவில்லை என்றா லும், வாட்ஸ்அப் வதந்திகள் ஒரு வித அச் சத்தை, பதற்றத்தை உருவாக்கி வருகிறது. இதனையடுத்து கோவை மாநகரில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. காவல் துறையினர் மட்டுமின்றி சிறப்பு காவல் படை, தமிழ்நாடு காமாண்டோ படை, அதிவிரைவுப் படையினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவை நகருக் குள் நுழையும் வழியில் 11 சோதனை சாவ டிகள் தவிர, கூடுதலாக நகரில் 28 இடங்க ளில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின் றது. 45 ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். பொதுமக்கள் அதி கம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கோவை மாவட்ட ஆட்சி யர் ஜி.எஸ்.சமீரன், மேற்கு மண்டல காவல் துறைத்தலைவர் சுதாகர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன், வீடியோ கான்ப ரன்ஸ் மூலம் தலைமை செயலாளர் இறை யன்பு ஆலோசணை மேற்கொண்டார். சட்டம் ஒழுங்கு தொடர்பாக இந்த ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தலைமை செயலாளர் தலைமையில் 17 மாவட்ட உயர திகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கோவையில் தொடர் சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். கோவை மாவட்டத்தில் நடந்த 7 சம்ப வங்களில் உயிர் மற்றும் உடமைகள் சேதம்
அடையவில்லை. பொது மக்கள் பதட்டமோ, அச்சமோ பட வேண்டிய சூழல் இல்லை. கண் காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மத நல்லிணக்கத்திற்கான கூட்டங்கள் நடத்தி வருகிறோம். 94 ஜமாத் தலைவர்களுடன் கூட் டம் நடைபெற்றது. இந்து அமைப்புகளின் தலைவர்களுடன் கூட்டம் நடைபெற உள் ளது. ஊரக மற்றும் மாநகரப் பகுதிகளில் சம் பவங்கள் நடந்தாலோ, வெளி மாநிலம் அல் லது வெளி மாவட்ட நபர்கள் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக் கும் தகவல் அளிக்க தனி குழு அமைக்கப்பட் டுள்ளது. ஒரு சில சமூக வலைதளங்களில் மக்களிடம் பதட்டத்தை உருவாக்கும் வகை யில் வெடிகுண்டு வீசப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது. அப்படி எதுவும் நடைபெற வில்லை. இன்னும் ஒரிரு நாளில் தனிப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றார். இதனைத்தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகை யில், நடைபெற்ற அனைத்து சம்பவங்களி லும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இரு சக்கர வாகனங்கள் வேகமாக செல்வதால் இருசக்கர வாகனத் தின் எண்ணை கண்காணிப்பு கேமராவில் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒரு சில குற்றவாளிகள் அடையாள காணப்பட்டுள்ள னர். சமூக வலைதளங்களில் தவறான தக வல் பரப்புதல், இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பதிவிடு பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவ டிக்கை எடுக்கப்படும். அமைதியை சீர்குலைப் பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் படுவார்கள், என்றார்.