கோவை, மே 7- கோவையில் எலக்ட்ரானிக் மற்றும் குப்பை கழிவுகளைக் கொண்டு கார், டெலி போன், கிராமபோன் உள்ளிட்ட பொருட்க ளின் பிரம்மாண்ட வடிவங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. கோவை மாவட்டத்தை அழகுற மாற்றும் வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சி களை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதி யாக உக்கடம் குளக்கரையில் வித்தியாச மான முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. மாநகராட்சியின் குப் பைகள் கொட்டப்படும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் சேகர மாகும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பிரம்மாண்ட செல்பி பாயிண்டுகள் அமைக்கப் பட்டு வருகின்றன. கார், டெலிபோன், கிராம போன், தண்ணீர் பம்ப் உள்ளிட்ட 5 பொருட் களின் பிரம்மாண்ட உருவங்கள் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கழிவுகளைக் கொண்டு உரு வாக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 5 டன் கழிவுகளைக் கொண்டு இந்த பிரமாண்ட வடிவங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாந கராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவு கள், பல்வேறு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட கம்ப்யூட்டர் கீபோர்டுகள், மவுஸ், ஹார்டு டிஸ்க் போன்ற எலக்ட்ரானிக் கழிவுகள், தொழிற்சாலைகளில் இருந்து பெறப்பட்ட இரும்பு கழிவுகள் ஆகியவற் றைக் கொண்டு இந்த பிரம்மாண்ட உரு வங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களை ஈர்க்கும் வகையிலும், பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருள் கழிவுகள் எவ்வளவு வெளியேற்றப்பட்டு வரு கிறது என்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாக மாநக ராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.