districts

அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா அதிமுக பிரமுகர் கைது

கரூர்,மே 19- அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர் களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு மே 19 அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் முன்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் பிடிபட்டார். மகேந்திரனை திமுகவினர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வந்தவர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டது.