திருப்பூர், டிச.11 - திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதை அடுத்து அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படு கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலை யை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் சின் னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளை நீராதாரங்களாக கொண்டு 90 அடிக்கு நீர் தேங்கும் வகையில், 4.04 டிஎம்சி கொள்ளள வுள்ள அமராவதி அணை கட்டப் பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையை கடந்த நிலையில், இதன் தாக்கத்தால் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை, கொடைக்கானல் மற்றும் மறையூர், மூணாறு உள் ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இங்கு நீர் வரத்தை பொதுப்பணித் துறை அதி காரிகள் கண்காணித்து வருகின் றனர். இதனை அடுத்து அணையில் ஏற் கனவே 89.5 அடிக்கு நீர் தேக்கப் பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுமையாக அணை மதகுகள் வழியாக அமரா வதி ஆற்றில் உபரிநீராக வெளியேற் றப்பட்டு வருகிறது. ஞாயிறன்று காலை 8 மணி நில வரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 89.41 அடிக்கு நீர் மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1191 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 1283 கன அடி தண்ணீர் உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. அணை யின் மொத்த கொள்ளளவான 4.04 டிஎம்சியில் தற்போது 3.99 டிஎம்சிக்கு நீர் இருப்பு உள்ளது. அணை முழு கொள்ளளவில் தற்போது உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர் அணைக்கு ஆயிரம் அடிகளை கடந்து நீர் வரத்து வந்து கொண்டிருப்பதால், வரும் நீர் முழுமையாக உபரியாக வெளியேற்றப்படுகிறது. இந்த ஆண்டில் 5 ஆவது முறையாக அமரா வதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.