districts

img

அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

கோவை, நவ. 19 –  கோவை கொடிசியா வளா கத்தில் மாநில அளவிலான 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ஞாயிறன்று நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட கூட்டுறவு சங்கத்தினர் பங்கேற் றனர்.  இந்நிகழ்வில், கூட்டுறவு துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி, மின் சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக, இந்நிகழ்வில் கூட்டுறவு துறை சாதனை மலரை  அமைச்சர் ஐ.பெரியசாமி வெளி யிட அமைச்சர் செந்தில்பாலாஜி பெற்றுக்கொண்டார். விழாவில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், கூட்டுறவு சங்கங்கள் ஏழை மக்களுடன் இரண்டற கலத்து அவர்கள் வாழ்வை மேம்பட செய்கின்றது.  ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை மாற்றி தலை நிமிர்ந்து இருக்கும் வகையில்  இத் துறை மாற்றப்பட்டுள்ளது.

நகை  கடன் தள்ளுபடி செய்து இருப்ப துடன்,  மகளிர் சுய உதவிக்கடன் களையும் தள்ளுபடி செய்ய செயல் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மகளிர் சுய உதவி குழு விற்கு மட்டும் ரூ1000 கோடி கடன்  இலக்கு நிரணயம் செய்து அதற் கான பணிகள்  நடைபெற்று வரு கின்றது என்றார்.  இதனைதொடர்ந்து சிறப்புரை யாற்றிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்த ஆண்டு மகளிர் சுய உதவி குழுக் களுக்கு மிக அதிகமாக கடன் அளிக்க இருக்கின்றோம். மகளிர்  சுய உதவிகுழு திட்டம் கலைஞ ரால் உருவாக்கப்பட்டது, இந்த திட்டத்திற்கு அதிக அளவில்  கடன் கொடுக்க முதல்வர்  சொல்லி இருக்கின்றார். ஏற் கனவே 5000 கோடி நகைகடன் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்கள் சுபிட்சமாக இருக்கின்றனர். கூட் டுறவு சங்கங்களால்தான் பொருளா தாரத்தில் முன்னேறிய நாடாக மாற்றுகின்றது, சமத்துவமும் இந்த கூட்டுறவில்தான் இருக்கிறது.  தற்போது கூட்டுறவு துறை தலை  நிமிர்ந்து நிற்கின்றது. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட இருக்கின்றது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர் களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட இருக்கின்றது. அனைத்து கூட் டுறவு ஓய்வு பெற்ற ஊழியர் களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கின்றது என்றார்.