ஈரோடு, ஜன. 13- இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், முதுநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியி டங்களை நிரப்ப விண்ணப்பங்களை அனுப்ப லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இந்திய விமான நிலைய ஆணையத்தால் இளநிலை உதவியாளர் மற் றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்கள் 119 காலியிடங்களாக அறிவிக்கப்பட்டுள் ளன. அதில் இளநிலை உதவியாளர் (தீய ணைப்பு) 73 இடங்கள் அடங்கும். இப்பணி யிடத்திற்கான கல்வித்தகுதி 12ஆம் வகுப்பு, டிப்ளமோ இன் மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் பிரிவு மற்றும் தீ தடுக்கும் ஓட்டு நர் உரிமம் (fire with driving licence) பெற்றி ருக்க வேண்டும். அதேபோல், அலுவலக உதவியாள ருக்கு 2 பணியிடங்கள் உள்ளன. இப்பணி யிடத்திற்கு பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதுநிலை உத வியாளருக்கு 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான கல்வித்தகுதி டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், ரேடியோ இன்ஜினியரி்ங் மற்றும் 2 ஆண்டு கள் அனுபவம் தேவை. முதுநிலை உதவியா ளருக்கு 19 பணியிடங்கள் உள்ளன. அவற் றிற்கு பி.காம் பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இக்காலி யிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன. 26 ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் www.aai.aero என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவ ரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தொலைபேசி எண் 0424-2275860 அல்லது 9842404508 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.