districts

img

அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் வீட்டில் முறைகேடான குடிநீர் இணைப்பு துண்டிப்பு

அவிநாசி, ஜூலை 10 – திருமுருகன்பூண்டி நகராட்சியில் அதி முக முன்னாள் பேரூராட்சி தலைவர் இல்லத் தில் முறைகேடான குடிநீர் இணைப்பை கண் டறிந்து நகராட்சி நிர்வாகம் திங்களன்று துண் டித்தது. திருமுருகன்பூண்டி நகராட்சி, இதற்கு  முன்பு பேரூராட்சியாக இருந்த நிலையில்  முறைகேடான குடிநீர் இணைப்பு கொடுக்கப் பட்டு வந்தது. இதுகுறித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியான சட்டப் போராட்டம் நடத்திய நிலையில், இப்பிரச் சனையில் மாநில அரசு நிர்வாகம் தலையிட்டு  முறைகேட்டைக் களைய நடவடிக்கை எடுத்தது.  இந்த நிலையில் திருமுருகன்பூண்டி 19ஆவது வார்டு பகுதியில் நகராட்சி நிர்வாகம்  மேற்கொண்ட ஆய்வில், அதிமுகவின் திருமு ருகன்பூண்டி முன்னாள் பேரூராட்சி தலைவர்  பழனிச்சாமி இல்லத்தில் முறைகேடான குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. நகராட்சி ஆணையர் அப் துல் ஹாரிஸ், நகர்மன்ற தலைவர்குமார், நக ராட்சி குடிநீர் பணியாளர்  உள்ளிட்டோர்  அங்கு சென்று இணைப்பைத் துண்டித்தனர்.  அதே பகுதியில் முறைகேடான இரண்டு  இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.