districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோடை மழையால் உயிர் பெறும் விவசாய நிலங்கள்!

தருமபுரி, ஜூன் 4- பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால், விவசாயி கள் கோடை உழவினை மேற் கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் பகுதி, அடர்ந்த மலை கள் சூழ்ந்த 50க்கும் மேற்பட்ட கிரா மங்களை கொண்ட பகுதியாகும். வானம் பார்த்த பூமி என்பதால், பருவ மழை, கோடை மழையைப் பொறுத்து விவசாயப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தற்போது பென் னாகரம், ஏரியூர், பெரும்பாலை, நாக மரை, தாசம்பட்டி, பாப்பாரப்பட்டி, அதன் சுற்றியுள்ள கிராமப் பகுதிக ளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. மழையின்றி காணப்பட்ட தரிசு நிலங் களில், தற்போது சுற்றுவட்டாரப் பகு தியில் பெய்த மழையால் விவசாயி கள் உழவுப் பணியினை மேற்கொள் ளத் தொடங்கியுள்ளனர். டிராக்டர் மூலம் உழவு மேற்கொள்ள ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,000 கட்டணம் நிர் ணயிக்கப்பட்டுள்ளதாலும், குறிப் பிட்ட நேரத்துக்கு டிராக்டர் கிடைக்கா ததாலும் விவசாயிகள் இயந்திர உழ வினைத் தவிர்த்து, மாடுகளை ஏர் பூட்டி உழவுப் பணியினை மேற் கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், அண்மைக்காலங்களாக பென்னாக ரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகு திகளில் போதுமான மழையின்றி வறட்சி நிலவி வந்தது. இதனால்  பெரும்பாலான விவசாயிகள் உழ வுப் பணியினை மேற்கொள்ளாமல், வெளி மாவட்டத்திற்கு கூலி வேலைக் குச் சென்றனர். இந்தப் பகுதி அடர்ந்த மலைகள் சூழ்ந்த பகுதி என்ப தால் பிரதான தொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. வறட்சியினால் கால்நடைகளுக்கு கூட தீவனங்கள் பயிரிட முடியாத நிலை ஏற்பட்டு, சிலர் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு சென்றனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவ தால் விவசாயிகள் மீண்டும் உழவுப் பணியினை மேற்கொண்டு வருகின்ற னர். பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்களும், பயிறு வகைக ளையும் சாகுபடி செய்யத் தொடங்கி யுள்ளனர். டிராக்டர்கள் உழவு மேற் கொள்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளதால், கால்நடை வளா்ப்பு விவசாயி கள் பழங்கால முறைப்படி ஏர்பூட்டி  விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், என்றனர்.

அணை நிலவரம்

பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:11.95/72 அடி
நீர்வரத்து:111கனஅடி.
நீர் திறப்பு:57கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:37.75/160 அடி
நீர்வரத்து:341.99கனஅடி
நீர் திறப்பு: 20 கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:77.90/120அடி
நீர்வரத்து:244கனஅடி
நீர் திறப்பு:22கனஅடி
திருமூர்த்தி அணை 

 இளம் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் நிறைவு

சேலம், ஜூன் 4- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த இளம் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் திங்களன்று நிறைவடைந்தது.

தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில் நுட்ப மன்றம் சார்பில், 9 ஆம் வகுப்பு பயி லும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இளம் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 15 நாட்க ளுக்கு நடைபெற்றது. கலை, அறிவியல் படிப்புகள் குறித்த தெளிவினைப் பள்ளி பரு வத்திலேயே அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் தெரிந்து கொள்ளும் வகையில்  இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது பயிற்சி  முகாம் நிறைவு விழாவில் ஒருங்கிணைப் பாளரும், உணவு அறிவியல் துறை பேரா சிரியருமான ஜெ.பிரகாஷ் மாறன் வரவேற் றார். புல முதன்மையர்கள் வி.ராஜ், கே.ஜெய ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பயிற்சி முகாமில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.ஜெகநாதன் நிறைவு விழா உரையாற் றினார். இந்நிகழ்ச்சியில் கல்வியில் துறை பேராசிரியர் எம்.வக்கீல் நன்றி கூறினார். 15  நாள் பயிற்சி முகாமில் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 80 பேர் கலந்து கொண்ட னர்.     

 கலப்பட மது விற்பனை: ஊழியர்கள் பணியிடை நீக்கம்

உதகை, ஜூன் 4- கலப்பட மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று மேற்பார்வையாளர்கள், 10 விற் பனையாளர்கள் உதகையில் பணியிடை நீக் கம் செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரியில் மது பாட்டிலில் போதை வஸ்து கள் கலந்து விற்பனை செய்யப்படுட்டதால் மது பிரியர்கள் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இந்த கலப்பட மது விற் பனை குறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மற்றும் மது விலக்கு போலீசாருக்கு புகார் தெரிவித்திருந்தனர். ஆனால், இதன்மீது எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மது விலக்கு போலீசார் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது. இதனால் மது பிரியர்கள் பலர் உயிரிழந்த சம்பவம் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத்தொடர்ந்து கலப்பட மதுவால் பாதிக்கப்பட்டவர்கள், சென்னையில் உள்ள  டாஸ்மாக் பறக்கும்படை தலைமை அதிகாரி களுக்கு போதிய ஆதாரத்துடன் புகார் மனு அனுப்பினர். இதன் எதிரொலியாக கடந்த வாரம் உதகை டாஸ்மாக் மதுக்கடையில் டாஸ்மாக் பறக்கும்படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பின்பு, கலப்பட மது விற் பனை செய்த மேற்பார்வையாளர், விற்பனை யாளர்கள் என, 5 பேர் அதிரடியாக பணி யிடை நீக்கம் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு, ஆய்வுக்கு கலப்பட மது பாட்டில்களை எடுத்து சென்றனர்.

இந்நிலையில், பறக்கும்படை விசார ணையில் மாவட்டத்தில் பல டாஸ்மாக் மதுக் கடைகளில் கலப்பட மது விற்பனை செய்வது தெரியவந்தது. உதகை லோயர் பஜார், நக ராட்சி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்க டையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கலப்பட மது  விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, கலப்பட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த னர்.

இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலா ளர் கண்ணன் கூறுகையில், கலப்பட மது விற் பனை மற்றும் பணம் கையாடல் செய்தது தொடர்பாக உதகை லோயர் பஜார் டாஸ்மாக்  கடையின் மேற்பார்வையாளர் சஜி, 2 விற்ப னையாளர்கள், நகராட்சி சாலையில் உள்ள  டாஸ்மாக் மதுக்கடையின் மேற்பார்வையா ளர்கள் பாண்டியன், வால்மிகி, 8 விற்பனை யாளர்கள் கலப்பட மது விற்பனையில் ஈடு பட்டதாக அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், என்றார்.

யானை வழித்தட புதிய வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு

உதகை, ஜூன் 4- யானை வழித்தட புதிய வரைவு அறிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒரு வர் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட் டத்தில் ஈடுபட்டார்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் வனத் துறை அறிவித்தள்ள யானை வழித்தட புதிய வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி யும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கூட லூரில் வசிக்கும் சுமார் 35 ஆயிரம் குடும் பங்கள் வெளியேறும் அபாயம் உள்ளது. இத னால், இந்த விரிவாக்க திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஓவேலி பகுதியைச் சேர்ந்த மணிவர்மா(40) என்பவர் பிஎஸ்என்எல் அலுவலக வளா கத்தில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி  போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த கூடலூர்  தீயணைப்புத் துறையினர், போலீசார், வரு வாய்த் துறையினர் மற்றும் வனத்துறையி னரும் இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். மேலும், கூடலூர் சட்டப் பேரவை உறுப் பினர் பொன்.ஜெயசீலன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அந்த நபர் கீழே இறங்கினார். பின்னர் போலீ சார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.