districts

img

ரயில் நிலையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுரை

கோவை, செப்.13- கோவை ரயில் நிலையத்தில் குழந்தைகளின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என காவலர்களுக்கு ரயில்வே காவல் கூடுதல் இயக்குநர் வனிதா அறிவுறுத்தி யுள்ளார். கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் கூடுதல் இயக்குநர் வனிதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் உமா ஆகியோர் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேறகொண் டனர். இதனைத்தொடர்ந்து கோவை ரயில்வே உட்கோட்ட காவல் நிலையங்களான கோவை, போத்தனூர், உதகை, மேட்டுப்பாளையம், திருப்பூர் மற்றும் ஈரோடு காவல் நிலை யங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் மற்றும் சட்டம் ஒழுங்கு வழக்குகளின் தற்போதைய நிலைய குறித் தும், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டனர். இதன்பின் ரயில் நிலையங்களின் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாது காப்பு உறுதி செய்வது குறித்து காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. த, பெண் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வா ளர்கள் மற்றும் பெண் காவலர்களுடன் தேசிய பெண் காவ லர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற் பாட்டை கோவை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பா ளர் யாஸ்மின் மற்றும் கோவை ரயில்வே காவல் ஆய்வா ளர் மீனாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.