ஈரோடு, பிப்.14- தமிழ்நாடு ஆளுநர் ரவி வரம்புகளை மீறி சகதிகளை வாரி இறைப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் செல்வபெருந்தகை குற்றஞ் சாட்டினார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில், புரட்சி யாளர் அம்பேத்காரையும், பிரதமர் மோடியையும் தொடர்பு படுத்தி பேசியி ருக்கிறார். பேச்சுவாக்கில் தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக பல வன் கொடுமைகள் நடைபெறுகிறது என்று சொல்லியிருக்கிறார். ஆளுநர் என்பவர் அரசியலமைப்பு சட்டத்தின்மீது நம் பிக்கை வைத்து பதவியேற்றிருப்பவர். ஆனால் அவர் பேசும்பொழுது என்ன பேசுகிறோம், எதைப் பேசுகிறோம், வரம் பைப் பற்றி புரிதல் இல்லை. தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் ரவி வரம்புமீறி சகதி களை வாரி இறைக்கிறார். தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற வேண்டும், நிம்ம தியில்லாமல் அமைதி இன்மையை உரு வாக்க வேண்டும் என்பதில் ஆளுநரின் பேச்சு இருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, என்றார். எடப்பாடி நாடகம்: அழகிரி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த காங்கி ரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழ கிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இது காங் கிரஸ் நின்ற இடம். எனவே இந்த தொகு தியை தலைவர் ஸ்டாலின் எங்களுக்கு வழங்கியிருக்கிறார்.
இதுதான் கூட்ட ணிக்கு லட்சணம். ஆனால், எதிரணி யில், தமிழ்மாநில காங்கிரஸ் போட்டி யிட்ட தொகுதி இது. வாசனிடமிருந்து அநியாயமாக இந்த தொகுதியைப் பிடுங்கி, அவர்களை சிறுமைப்படுத்தி யுள்ளனர். எடப்பாடிக்கு பாஜக மேல், திடீரென வெறுப்பு வந்துள்ளது. பாஜ கவோ, அண்ணாமலையோ, மோடி யின் படமோ அவர்களோடு வந்தால் இந்த தொகுதியின் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண் டுள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு திரும் பவும் ஒன்றாகி விடுவார்கள். நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். அடிமைத்தனம் அவர்களுக்குப் பழக்கப்பட்ட விசயம். ஆகவே அவர்கள் அப்படித்தான் இருப் பார்கள் என்றார். பேட்டியின்போது, வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோ வன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட வர்கள் உடனிருந்தனர். சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆதரவு பல்வேறு அமைப்புகளும் மதர் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான இளங்கோவனுக்கு ஆத ரவு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவும் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித் துள்ளது. மேலும், புதனன்று மாலை பிரா மண பெரிய அக்ரஹாரம், வண்டிப்பேட் டையில் தேர்தல் பிரச்சார கூட்டமும் நடத்துகிறது. மாநில உதவி தலைவர் ப.மாரிமுத்து, மாவட்ட தலைவர் கே. எஸ்.இஸாரத்தலி, டி.விஜயகுமார் ஆகி யோர் பங்கேற்றனர்.