districts

மின் கட்டண உயர்வை கைவிடுக: செப்.19-ல் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப்.  13 - சாமானிய மக்கள் மற்றும் சிறு,  குறு, நடுத்தரத் தொழில் துறை யினரை கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி செப் டம்பர் 19ஆம் தேதி திங்கள் கிழமை திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து நகரம் மற்றும் கிராமப் புறங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர்  மாவட்ட செயற்குழு தீர்மானித் துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம், செவ்வாயன்று செயற் குழு உறுப்பினர் எஸ்.சுப்பிர மணியன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி, செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு மின் உற்பத்தி, விநியோகத்தை முழுமையாக தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டும் என்ற  நோக்கத்துடன், கார்ப்பரேட்டு களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநில மின்வாரியங்கள் அதானி  போன்ற பெரிய கார்ப்பரேட்டு களின் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம்  வாங்க வேண்டும் என ஒன்றிய அரசு  நிர்ப்பந்தம் செலுத்துகிறது. இத னால் மாநில மின் வாரியங்கள் கடும்  நிதி நெருக்கடியையும், அதனால் ஏற்படும் சுமைகளையும் தாங்க  முடியாமல் நலிவைச் சந்திக் கின்றன. இந்த நேரத்தில் ஒன்றிய அரசின் தவறான கொள்கை, நிர்ப்பந்தத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய மாநில அரசு,  மாறாக மக்கள் தலையில் சுமையைச் சுமத்தும் வகையில் மாநில அரசும் தன் பங்கிற்கு தாறு மாறாக மின் கட்டணத்தை உயர்த்து வது சரியல்ல. எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி உயர்வு, வேலையின்மை, வருவாய் வீழ்ச்சி  உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் சாமானிய மக்கள் வாழ்வு கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அத்துடன் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களும் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. கிராமப்புறங்களும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரு கின்றன. இவ்வாறு ஒட்டுமொத்த சமூகமும் மிகவும் சிக்கலான நிலையை சந்தித்துக் கொண்டி ருக்கும் நிலையில், மின் கட்ட ணத்தை உயர்த்தி, நடைமுறைப் படுத்தி இருப்பது எரியும் நெருப்பில்  எண்ணெய் ஊற்றியது போல, நெருக்கடியை மேலும் கடுமை யாக்குவதாகவே இருக்கும். எனவே மின் கட்டண உயர்வை மாநில அரசு உடனடியாக ரத்து  செய்ய வேண்டும். இந்த கோரிக் கையை வலியுறுத்தி செப்டம்பர்  19ஆம் தேதி திங்கள்கிழமை திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து நகர, ஒன்றியங்களிலும் ஆர்ப் பாட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர்  மாவட்ட செயற்குழு முடிவு செய் துள்ளது. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினருடன், அனைத்துப் பகுதி மக்களும் கை  கோர்த்து மின் கட்டண உயர்வுக்கு  எதிராக கண்டனம் முழங்க முன் வரும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

பேருந்துகளை இயக்குக!

கொரோனா காலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு  கிராமப்புறம் மற்றும் புறநகரப்  பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. சகஜ நிலை திரும்பிய பிறகும் இதில் பல  பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் கிராமப்புற, நகர்ப்புற  மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நோயாளிகள், அன்றாட  வேலைக்கு பேருந்து பயணத்தை நம்பி இருக்கக்கூடியோர் கடுமை யாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே நிறுத்தப்பட்ட அனைத்து வழித்தடப் பேருந்துகளையும் உடனடியாக முழுமையாக இயக்கு வதற்கு போக்குவரத்து துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறோம். அத்துடன் திருப்பூரில் இருந்து  கோவை செல்வதற்கு பல்லடம்  மற்றும் அவிநாசி வழித்தடங் களிலும் போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் பற்றாக்குறை நிலை உள்ளது. இதனால் அன்றாடம் கோவை, திருப்பூர் பயணம் மேற்கொள்ளக்கூடியோர் மிகவும் சிரமப்படுவதுடன், அல்லாடும் நிலை ஏற்படுகிறது. எனவே திருப்பூர் - கோவை பேருந்துகளை பல்லடம், அவி நாசி இரு வழித்தடங்களிலும் வழக்கமான எண்ணிக்கை பேருந்து களையும், தேவைக்கு ஏற்ப கூடுதல்  பேருந்துகளையும் முழுமையாக இயக்க வேண்டும். அதேபோல் திருப்பூர் கோவில்வழி வழித் தடத்தில் இருந்து தென் மாவட்டங் களுக்கும் போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் ஒவ்வொரு நாளும் வெளியூர் செல்லும் பயணி கள் குறிப்பாக பெண்கள், முதி யோர் இரவும், பகலும் நீண்ட நேரம் காத்திருப்பதுடன், தவிக்கும் நிலை உள்ளது. எனவே தென் மாவட்டங்களுக்கும் கூடுதல் பேருந்துகளை பயணிகளின் தேவைக்கு இயக்க அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாய்க்கடி மருந்து பற்றாக்குறை

திருப்பூர் மாவட்டத்தில் சமீப  காலமாக தெரு நாய்கள் எண்ணிக்கை கட்டுப்பாடு இல் லாமல் பெருகியுள்ளது. இதனால்  நாய்க்கடியில் பாதிக்கப்பட்டு வெறி நோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ள  அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடிச் செல்வோர் எண்ணிக்கையும் அதிக ரித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு  உயிர் காக்கும் ரேபிஸ் வெறி நோய் தடுப்பு மருந்து இல்லை என்றும்,  வெளியில் இருந்து வாங்கி வந்து  கொடுத்தால் ஊசி போடுகிறோம் என்று சொல்லும் நிலையும் உள்ளது. பொது மக்களின் உயிர்  காக்கும் பிரச்சனையில் வெறி  நோய்த் தடுப்பூசி இல்லை என்பதும், வெளியே சென்று  வாங்கி வரும்படி அலைக்கழிப் பதும் எந்த வகையிலும் ஏற்க முடி யாது. எனவே திருப்பூர் மாவட்டத் தில் வெறி நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை அளித்திட தேவையான அளவு வெறி நோய் தடுப்பூசிகளை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் இருப்பு வைக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு வழங்கவும்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மாநில அரசும்  இந்த மாவட்டத்துக்கு தேவையான  அளவு வெறிநோய் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக வழங் கிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண் டுள்ளது.

ரேசன் அரிசி கடத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடை களிலும் பொது மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இல் லாமல், முழுமையான அளவில்  வழங்கிட குடிமைப் பொருள் வழங்கல் துறை நடவடிக்கை எடுக்க  வேண்டும். குறிப்பாக ரேசன் கடை களுக்கு வழங்கப்படும் தரமான அரிசியை சுயநல சக்திகள் கடத்திச்  சென்று பதுக்கி வைத்து, அதிக விலைக்கு வெளிச் சந்தையில் விற் பனை செய்வதாக செய்தி வெளி யாகி உள்ளது. நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு தரமான அரிசி வழங்கப்படாமல், தரம் குறைந்த, சமைப்பதற்கு லாயக் கில்லாத பழுப்பு நிறமான, தூசிகள்  நிறைந்த அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் கேள்வி எழுப்பினால் இந்த அரிசிதான் மேலிருந்து வழங்கப்படுகிறது என்று சொல்லப்பபடுகிறது. ஆனால் தரமான அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுகிறது. இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே அரசு  நிர்வாகம் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மக்க ளுக்குத் தரமான அரிசி விநி யோகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்ட அரிசியை கடத்தி விற்பனை செய்வதை தடுத்திட உறுதியான நடவடிக்கை எடுப்பதுடன், இதற்கு  காரணமானவர்கள் மீதும், உடந் தையாக செயல்படுவோர் மீதும் அரசு நிர்வாகம் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது. 

 

;