districts

அரைகுறையாக விடப்பட்ட பிஎம்ஏஒய் வீடுகள்: குடியேற முடியாமல் தவிக்கும் 24 பயனாளிகள்

திருப்பூர், மே 29 – மூலனூர் ஒன்றியம் பொன்னிவாடி ஊராட் சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 24  வீடுகள் அரைகுறையாக விடப்பட்டுள்ளன. அந்த வீட்டிலேயே பயனாளிகளைக் குடியே றும்படி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் வலியு றுத்தி வருகிறது. அடிப்படை வசதிகள் இல் லாமல் அந்த வீடுகளில் குடியேற முடியாமல்  24 பயனாளிகள் தவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம்,  மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி  ஊராட்சியில் அனுமந்தக்கோட்டை என்ற  கிராமத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் கடந்த 21 – 22ஆம் நிதியாண்டில் 24  பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. மூலனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒப்புதலுடன் வீடு கட்டும்  பணி தொடங்கப்பட்டது. இந்த 24 பயனாளிக ளில் 2 பேர் மாற்றுத் திறனாளிகள், 2 பேர் வித வைகள் 20 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் கள் ஆவர். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத் தில் வீடு கட்ட ரூ.2லட்சத்து 40 ஆயிரம் வழங் கப்படுகிறது. எனினும் பயனாளிகள் இந்த தொகையுடன் கூடுதலாக செலவு செய்து வீடு  கட்டும் நிலை உள்ளது. குறிப்பாக ஒதுக்கீடு  செய்யப்பட்ட இடத்தை சுத்தம் செய்ய ஒவ் வொருவரும், தலா ரூ.5ஆயிரம் கொடுத்துள் ளனர். அதற்குப் பிறகு அடித்தளம் (பேஸ்மட் டம்) அமைக்க ரூ.10ஆயிரம் பெறப்பட்டுள் ளது. சிலாப் கல் அமைக்க ரூ.5ஆயிரம் பெறப் பட்டது. இந்த பயனாளிகள் அனைவரும் கிராமப் புற வேலை உறுதி திட்டத்தில், 100 நாட்கள்  செய்த வேலைக்குரிய சம்பளத்தொகையை யும் இந்த வீடு கட்டும் திட்டத்திற்கு என  ஊராட்சி நிர்வாகம் எடுத்துக் கொண்டுள்ளது.  கட்டப்பட்ட வீட்டிற்கு தண்ணீர் ஊற்ற ரூ.15 ஆயிரம் செலவு செய்துள்ளனர். வீட்டிற்கு மின்சார வசதி செய்ய ஒயரிங் செலவுக்கு ரூ.5  ஆயிரம் வழங்கியுள்ளனர். ஆக இங்குள்ள  ஒவ்வொரு பயனாளியும் அரசு நிதி ஒதுக்கீடு  ரூ.2.40 லட்சத்துடன், ரூ.75ஆயிரம் வரை கூடு தலாக செலவு செய்துள்ளனர். இந்த வீட்டின் அளவு 17 அடிக்கு 17 அடி என  மொத்தம் 289 சதுர அடியாகும். அதில் சமை யலறை அளவு 6 அடிக்கு 6 அடி., படுக்கை யறை 6அடிக்கு 8 அடி. வரவேற்பறை 8 அடிக்கு  17 அடி. ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று ஜன் னல், ஒரு கதவு பொருத்தப்பட்டுள்ளது. படுக்கை அறைக்கு கதவு இல்லை. வீட்டு  தரைத்தளம் முழுமையாக சிமெண்ட்ப் பூச்சு  பூசப்படவில்லை. உட்புறம் எந்த சுவரும் பூசப் படவில்லை. வெளிப்புறம் மட்டும் சிமெண்ட் பூசி, சுண்ணாம்பு அடித்து விடப்பட்டுள்ளது இந்த நிலையில் வெளிப்புறம் இருந்து வீட் டின் புகைப்படத்தை எடுத்து, வீட்டுப் பணி  முடிந்து விட்டது, பயனாளிகள் குடியேறலாம்  என்று மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்  கூறியுள்ளார்.  வீட்டு கட்டுமானப் பணி முழுமை அடை யவில்லை. கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மின் சார வசதி இல்லை. எனவே இந்த வீட்டில் எப் படி குடியேறுவது என்று வீட்டுப பயனாளிகள்  கேட்கின்றனர். ஆனால் மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர், இதற்கு மேல் எந்த வேலையும் செய்ய முடியாது என்று மறுப்புத்  தெரிவிக்கிறார்.  குடிநீர், கழிப்பிட வசதி இல்லாமல் பயனா ளிகள் குடியேற வேண்டும் எனச் சொல்வது  எதார்த்தத்துக்குப் பொருத்தமற்ற நிலையா கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கன கராஜ் கூறினார். இந்த வீடு கட்டும் திட்டத்துக்கு முதலில்  மணி என்பவர் ஒப்பந்ததாரராக செயல்பட் டுள்ளார். இரண்டாவதாக இவர் மாற்றப்பட்டு  செல்வம் என்பவர் ஒப்பந்ததாரராக வேலை செய்திருக்கிறார். எனினும் பயனாளிகள் குடி யிருக்க முடியாதபடி அரைகுறையாக இந்த  வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளை அங்கு  சென்று குடியேறுங்கள் என்று ஊராட்சி ஒன் றிய ஆணையர் கூறுகிறார். எனவே பிரதமமந்திரி வீடு கட்டும் திட்டத் தில் அனுமந்தங்கோட்டையில் இந்த 24 வீடு கள் கட்டியது குறித்து முறையாக ஆய்வு  செய்ய வேண்டும். முடிக்கப்படாத வேலை களை முடித்து, குறைந்தபட்சம் குடிநீர் வசதி  செய்து தர வேண்டும். தரை தளம், உட்புறம்  வீடு பூச்சு வேலைகளை முழுமையாக முடித் துத் தர வேண்டும். உடனடியாக இந்த பணி களை செய்து கொடுத்து வீடுகளை முழுமைப் படுத்தி 24 ஏழை பயனாளிகள் இங்கு வசிப்ப தற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கட் சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என். கனகராஜ் கோரியுள்ளார்.

;