கோவை மாநகராட்சிக்குட்பட்ட 13 ஆவது வார்டு மாணிக்கவாசக நகரில், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் புதிய கழிப்பிடம் கட்ட கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூன் ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். இதற்கான அடிக்கல் நாட்டுவிழா திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், சிபிஎம் மாமன்றக்குழு தலைவர் வி.இராமமூர்த்தி, சிபிஎம் மாமன்ற உறுப்பினர் சுமதி, முன்னாள் வடக்கு மண்டலத் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.