districts

img

6 மாதத்தில் 113 போக்சோ வழக்கு: 126 பேர் கைது

தருமபுரி, ஜூலை 31- தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 113 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 126 குற்றவாளிகள்‌ கைது செய்யப்பட்டுள்ளதாக தருமபுரி ஆட்சி யர் தெரிவித்தார்.  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் மாவட்ட அளவி லான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி தலைமை யில் புதனன்று நடைபெற்றது.  இதனைத்தொடர்ந்து ஆட்சியர் கி.சாந்தி அக்கூட்டத்தில் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதத்தில் 113 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 126 போச்சோ வழக்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 போக்சோ வழக்குகளின் குற்றவா ளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள் ளது. மேலும் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் வன்கொ டுமை நடை பெறுவதை முற்றிலும் தடுக் கவும், முன் கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்திட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பாலி யல் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் குழந்தை திருமணம் தடைச்சட் டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் பாலி யல் வன்கொடுமை தடுப்பு சட்டம்  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும் என்றார்.  இக்கூட்டத்தில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம். மாவட்ட சமூக நல அலு வலர் பவித்ரா. துணை காவல் கண்கா ணிப்பாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நா.நடராசன். சிறப்பு போக்சோ அரசு வழக்கு றைஞர். குழந்தை நலக்குழு உறுப்பி னர். நன்னடத்தை அலுவலர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.