கும்பகோணம், ஜூன் 9- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோயில் நகரமாக திகழ்கிறது. இங்குள்ள பேருந்து நிலையத்திற்கு வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து ஏராளமான பயணிகள் இரவு பகலாக வந்து போகின்றனர்.
இந்தப் பேருந்து நிலையத்தில் வணிக வளாகங்கள் அமைத்து வியாபா ரங்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் பேருந்து நிலையம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. ஆனால் இது தொடர்ந்து மாநகராட்சி நிர்வா கத்தால் சரிவர பராமரிக்கப்படாமலும், கழிவறைகள் சுகாதாரம் இன்றியும் இருக்கின்றன.
இந்நிலையில், ஜூன் 9 அன்று காலை 7 மணியளவில் பேருந்து நிலை யத்தில் உள்ளே இயங்கும் உணவகத் தில் கான்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த, நாகப்பட்டி னம் மாவட்டம் கீவளூர் சிவாஜி நக ரைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சண்முகம், அவரது மனைவி ஹேமலதா மற்றும் அங்கு சாப்பிட்டுக் கொண்டி ருந்தவர்கள் மீது மேற்கூரை விழுந்ததில் படுகாயம் அடைந்தனர்.
அதில் சண்முகம் மற்றும் ஹேமலதா ஆகியோர் தலையில் பலத்த காயத்து டன் இருந்ததால் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சண்முகம் மற்றும் ஹேமலதாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாநகர மாமன்ற உறுப்பினர் செல்வம், மாநகரச் செய லாளர் செந்தில்குமார், நகரக் குழு உறுப் பினர்கள் கண்ணன், அன்புமணி ஆகி யோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரி வித்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தினசரி வந்து போகும் இடமான கும்ப கோணம் பேருந்து நிலையத்தில், பழுத டைந்த கட்டிடத்தை கண்டறிந்து, அதை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், அந்த பழுதை உடனே சீரமைக்க வேண் டும். பொதுமக்கள் பயன்படுத்தும் கழி வறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுகா தாரமாக வைத்துக் கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சண்முகம்-ஹேமலதாவிற்கு சிறப்பு சிகிச்சை அளித்து, அவர்கள் விரைவில் குணமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.