districts

ரூ. 13 லட்சம் மோசடி: முன்னாள் வீரர் கைது

கிருஷ்ணகிரி, மார்ச் 6- கடற்படையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 13 லட்சம் மோசடி செய்த  முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரை  காவல் துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், காமாட்சிபுரத்தை சேர்ந்த ரங்கனுக்கு கடற்படையில் வேலை வாங்கித் தருவதாக தருமபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி தேவராஜ் வீதியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் பழனி (52) தெரிவித்துள்ளார். இதை நம்பி ரங்கனின் தந்தை செவத்தான்  பழனியிடம் ரூ. 13 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி  வந்துள்ளார். இதையடுத்து பணத்தை திருப்பிக் கேட்டபோது மிரட்டல் விடுத்துள் ளார். இது குறித்து செவத்தான் அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் பழனியை கைது செய்தனர்.