காஞ்சிபுரம், அக் 2 – காஞ்சிபுரம் மாவட்ட தலைநகரில் தொழிலாளர் துறை அலுவலக அமைக்க வேண்டும் என சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட 12வது மாநாடு ஞாயி றன்று (அக்.2) காஞ்சி புரத்தில் தோழர் இ.இராம நாதன் நினைவரங்கத்தில் மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர் தலைமையில் நடை பெற்றது. மாநாட்டு கொடியை மாவட்ட தலை வர் டி.ஸ்ரீதர் ஏற்றிவைத்தார். வரவேற்புக் குழுத் தலை வர் பி.சீனிவாசன் வர வேற்றார். மாநாட்டைத் துவக்கி வைத்து சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் பேசினார். மாவட்டச் செயலாளர் இ.முத்துக் குமார் வேலை அறிக்கையை யும், பொருளாளர் ஜி. வசந்தா வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி தமிழ்நாடு விவ சாய சங்க மாவட்டச் செய லாளர் கே.நேரு பேசினார். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசினார். வரவேற்புக் குழு செயலாளர் ஜி.எஸ்.வெங்க டேசன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
தொழிலாளர் மீதான பழி வாங்கல் நடவடிக்கைகளை திரும்பபெற்று, வேலை இழந்தவர்களுக்கு வேலை வழங்கவேண்டும், நிரந்தர மற்ற தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தர மாக்குவதோடு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், நிதி மோசடி கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட தொழி லாளர்களிடம் தவணை முறையில் கடன்களை பெற தனியார் வங்கிகள் முன்வர வேண்டும், தனியாரிடம் பணிபுரியும் கைத்தறி நெசவாளர்களுக்கு சமூக நலத் திட்டங்களை உறுதி செய்திட வேண்டும், சுமைப் பணி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும், அப்ப ளம் தொழி லாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், அமைப்புசாரா நலவாரிய பதிவுகளை நேரடியாக பதிவை துவக்கிட அரசு முன்வர வேண்டும், மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் அனை வரும் நிரந்தரப் படுத்த வேண்டும், மீனாட்சி மருத்துவமனையில் பெண் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சி நிர்வாகம் நிலைநாட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
49பேர் கொண்ட மாவட்டக்குழுவிற்கு தலை வராக டி.ஸ்ரீதர், செய லாளராக இ.முத்துக்குமார், பொருளாளராக எஸ்.சீனிவாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.