districts

சிலிண்டர் குடோன் தீவிபத்து; சிபிஎம் தலைவர்கள் ஆய்வு

காஞ்சிபுரம், செப் 30 - காஞ்சிபுரம்மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்திற்குட்பட்ட தேவரியம்பாக்கம் கிராமத்தில் தனியார் எரி வாயு (கேஸ்) குடோன் தீ விபத்து (செப்.28) புதனன்று ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 6க்கும் மேற்பட்டோர் தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் 6 பேரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அதில் மூவர் சிகிச்சை பல னின்றி உயிரிந்தனர். உயி ரிழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் ஆழ்ந்த அஞ்சலியும் அவர் குடும்பத்தினருக்கு  அனுதாபத்தை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க அரசு நிர்வாகம் அனைத்து விதத்திலும் செயல்பட வேண்டும். அதேசமயம் குடியிருக்கும் பகுதியில் கேஸ் நிரப்பும் குடோன் அனுமதி வழங்கியது எப்படி என்ற கேள்வி  எழுந்துள்ளது.  மேலும் வேறு எங்கும் இது போன்ற விபத்துக்கள்  நடைபெறாமல் இருக்க அரசு நிர்வாகம் மாவட்டம் முழுவதும் கண்காணிக்க வேண்டும். தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்க ளுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகம் உடனடியாக முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகை வழங்க வேண்டும். தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு வேண்டு கோள் வைத்துள்ளதாக இவ்வாறு அவர் தெரி வித்தார். தேவரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் கேஸ் நிரப்பும் குடோனில் தீவிபத்து ஏற்பட்ட இடத்தை நேரில் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.நேரு, காஞ்சிபுரம்-வாலாஜாபாத் ஒருங்கிணைந்த வட்டச் செயலாளர் எஸ்.பழனி ஆகியோர் பார்வை யிட்டனர்.