districts

விஷச் சாராய பாதிப்பு ஜிப்மரில் 4பேர் கவலைக்கிடம்

கள்ளக்குறிச்சி,ஜூன் 23- கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித் தவர்களில் தற்போது ஜிப்மர் மருத்துவமனை சிகிச்சை யில் திருமாவளவன் (46), ஏசு தாஸ், (35), மகேஷ் (41), பெரியசாமி (40), மாயக் கண்ணன் (72), கண்ணன் (55), வந்தனா (திருநங்கை- 27), பாலு (29), மோகன் (50), சிவராமன் (45), ராமநாதன் (62), செல்வம் (45) ஆகிய 12 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். அதில் 10 பேர் புதுச்சேரி ஜிப்மரில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது பற்றி ஜிப்மர் தரப்பில் விசாரித்தபோது, “சிகிச்சையிலுள்ள 12 பேரில்  யாரும் மூளைச்சாவு அடைய வில்லை. நால்வர் நிலை கவ லைக் கிடமாக உள்ளது. அவர்களின் உறுப்புகள் செயல் இழக்க தொடங்கி யுள்ளன. அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டனர். 

ஆட்சியர் ஆய்வு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாடூர் மற்றும் வீரசோழபுரம் கிராமத்தில் மெத்தனால் அருந்தி உயிரி ழந்தவர்களின் இல்லங் களுக்கு மாவட்ட ஆட்சியர்  எம்.எஸ்.பிரசாந்த் ஞாயிற்று கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்  பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்ப  உறுப்பினர்கள், படிப்பு, தொழில், வீடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதி கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். 

சிப்ஸ் கடை உரிமையாளர் கைது

இந்நிலையில் கள்ளக் குறிச்சி விஷச் சாராய உயிரி ழப்பு சம்பவம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த பிரபல சிப்ஸ் கடை  உரிமை யாளர் சக்திவேலை திரு வண்ணாமலையில் சிபி சிஐடி போலீசார் கைது செய்தனர். விஷச் சாராய விவகாரத்தில் முக்கிய குற்ற வாளியான மாதேஷ் நண்பர் ஆவார் இவர்.