world

img

லெபனான் மக்கள் 700 பேரைக் கொன்று குவித்த இஸ்ரேல்! ஹிஸ்புல்லா தலைவரையும் படுகொலை செய்தது

பெய்ரூட்/டெல்அவிவ்,செப். 28- பாலஸ்தீனத்தின் காசா பகுதி யைத் தொடர்ந்து, லெபனான் மீதும் இஸ்ரேல் தனது கொலைவெறித் தாக்  குதலை துவங்கியுள்ளது. வான்வழி யாக குண்டுமழை பொழிந்து வருகிறது.

இதில், 700-க்கும் மேற்பட்ட அப்  பாவி பொதுமக்களைக் கொன்று  குவித்துள்ளது. ஆயிரக்கணக்கா னோர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். 2006-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு மிக மோசமான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் பெய்ரூட் மீது  நடத்தியுள்ளது. சனிக்கிழமை மட்டும்  20 முறை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ் ரல்லாவையும் இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை அதிகாரியான லெப்டினெண்ட் ஜென ரல் ஹெர்சி ஹாலேவி, “இது முடிவு  அல்ல. இஸ்ரேல் மக்களை அச்சுறுத்  தும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு  எச்சரிக்கை, எங்களுக்கு எதிராக  செயல்படுபவர்களை கண்டுபிடித்து எப்  படி அழிப்பது என எங்களுக்கு தெரி யும்” என்றும் கொக்கரித்துள்ளார்.

ஐ.நா.வில் இருந்தபடி நேதன்யாகு உத்தரவு

மேலும், ‘லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையத்தில் விமா னங்கள் எதையும் தரை இறக்க அனு மதிக்கக் கூடாது’ என லெபனானுக்கு, இஸ்ரேல் தடை உத்தரவும் போட்டுள்  ளது. ஈரானில் இருந்து ஒரு விமானம்  வந்த நிலையில் அவ்விமானத்தை தரையிறக்க அனுமதித்தால் ஒட்டு மொத்த விமான நிலையத்தையும் குண்டு வீசித் தகர்ப்போம் என மிரட் டல் விடுத்துள்ளது.

போர் நிறுத்தம் குறித்து பேசு வதற்காக ஐக்கிய நாடுகள் அவை  அழைத்திருந்த நிலையில், இஸ்ரேல்  பிரதமர் நேதன்யாகு, அங்கிருந்த படியே லெபனானின் தெற்கு பகுதி  முழுவதையும் தாக்கி அழிக்க ராணு வத்திற்கு உத்தரவிட்டதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

ஹிஸ்புல்லா பதிலடி

ஹிஸ்புல்லா அமைப்பின் அலுவல கங்கள், ராணுவத் தளங்கள், முக்கிய  தளபதிகளை இஸ்ரேல் ராணுவம் படு கொலை செய்துள்ள நிலையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பும் நூற்றுக்க ணக்கான ஏவுகணைகள் மூலம் தாக்கு தல் நடத்தி வருகிறது. சனிக்கிழமை யன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தியும் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது.