world

img

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
லெபனானில் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது. லெபானானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத்துறை கண்டறிந்ததையடுத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இன்று  நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.