tamilnadu

சேதப்படுத்த முடியாது... - ப.முருகன்

அமிர்மும் நஞ்சும்
ஓரிடத்திலேயே
விளையும் என்றார்கள்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் 
நரேந்திர தாமோதர் மோடியும்
குஜராத்திலேயே பிறந்தார்கள்

அமைதிவழியும் ஆக்கப்பூர்வவாழ்வும் 
மக்களின் உரிமைப்போரும்
காந்தியின் வாழ்க்கையானது.

கலவரவெறியும் ரத்தவெறியும்
சிறுபான்மையினர் அழித்தொழிப்பும்
நரேந்திரரின் நடைமுறையானது.

ஈஸ்வரஅல்லா தேரேநாம்
மோகன்தாஸின் முழக்கம்

ஊடுருவல்காரர்கள் தாலிபறிப்பவர்கள்
மோடியின் வெறுப்புக் கோஷம்

ராட்டை காந்தியின் கருவி
திரிசூலம் மோடியின் ஆயுதம்

பிரிவினைக்காலத்து நவகாளியில்
காந்தியின் யாத்திரை உண்ணாவிரதம்

கோத்ராவுக்கு பிந்தைய குரூரத்தில் / குஜராத்தில்
மோடியின் மௌனம் கலவர சம்மதம்.

விடுதலை உணர்வு காந்தியின் அம்சம்
அடிமைச் சேவகம் மோடியின் வம்சம்

பிரிட்டிஷ் எதிர்ப்பு காந்தியின் கையிருப்பு
மன்னிப்புக்கேட்பு சாவர்க்கரின் நாடித்துடிப்பு

சம்பரான் விவசாயிகளுக்கு துணை யானது
காந்தியின் அரசியல் நுழைவும் இயல்பும்

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கிட
அரசு எந்திரம் ஏவல் மோடியின் குணம்

காந்தி இந்தியாவின் அடையாளம்
மோடி தேசத்தின் அவமானம்

அமைதியும் வளமும் காந்தியின் விருப்பம்
சண்டையும் சச்சரவும் மோடியின் வியூகம்

மகாத்மா என்பதால் இந்தியாவுக்கு பெருமை
விஸ்வகுரு என்பதே மோடிக்கு பெருமை(!)

சபர்மதி ஆசிரம் காந்தியின் இருப்பு
ஆசிரமம் முடக்கம் மோடியின் விருப்பம்

கடையனையும் கடைத்தேற்றல் காந்தி தத்துவம்
அதானியை வளர்ப்பதே மோடியின் விசுவாசம்.

இந்தியா என்றால் காந்தி தேசம்
மோடி என்றால் வெறுப்பின் வாசம்

ரூபாய் நோட்டில் காந்தி பெருமையானது
கக்கூஸ்சுவர் காந்தி கண்ணாடி சிறுமையானது

அழியாத சித்திரம் காந்தியின் உருவம்
அழிக்க முடியாது மோடியால் நிச்சயம் 

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்என்றார் வள்ளுவர்

சிறுமைகள் கூடிச் சேதப்படுத்த முடியாது
காந்தியின் பெருமைப் பிம்பத்தை!