tamilnadu

img

போட்டித் தேர்வு : நீங்க 2k கிட்ஸ்- ஆ...? - ஹரி

வகுப்பிற்குள் நுழையும்போதே ஆசிரியர் பாடத்தைத் தொடங்கிவிட்டிருந்தார். மேலும் நால்வர் பின்னால் வந்ததைப் பார்த்து கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
ஆசிரியர், தேவதையைப் பார்த்திருக்கிறீர்களா? 
சிலர் இல்லை என்றார்கள். சிலர் நக்கலாகச் சிரித்தார்கள். 
என்ன இப்படியொரு சிரிப்பு
சார்.. எங்களுக்குப் பிடிச்ச பொண்ணுதான் தேவதை..
அப்போ தேவதைனா பொண்ணுங்கதான்... நானும், நீங்களும் ஆக முடியாதா..?
வாய்ப்பில்ல, சார்..‘
இருங்க ஒரு கதை சொல்றேன்... ஒரு விறகு வெட்டுற தொழிலாளி ஊருக்குத் திரும்புறாரு.. வர்ற வழில தண்ணிக்குள்ள இறங்குறாரு.. அவர் கைல வெச்சுருந்த கோடரி உள்ள விழுந்துரும்... தேடித் தேடிப் பாத்தா கிடைக்கவேயில்ல..
சார்.. சார்... இது எங்களுக்குத் தெரியும்.. ஒரு தேவதை வரும்.. முதல்ல தங்கக் கோடரியக் காட்டும்...என்னோடது இல்லனு சொல்லிருவாரு.. அப்புறமா வெள்ளிக் கோடரி.. அதுவும் இல்லனு சொல்லிருவாரு... அப்புறமா அவரோட கோடரியயே எடுத்துக் காட்டும்.. ஆமானு சொன்னவுடன், அவரப் பாராட்டி, மூணு கோடரியயும் தந்துட்டுப் போயிடும்..
பரவாயில்லயே, இந்தக் கதை தெரிஞ்சுருக்கே..
சார்... இது உங்க காலத்துக் கதை.. 
அதென்ன எங்க காலத்துக்கதை... ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி கூட வங்கித் தேர்வுல Reading Comprehensionஆ இந்தக் கதை இருந்துச்சு..
எங்களுக்குலாம் கேட்டா தட்டி எடுத்துருவோம், சார்.. ஆனாலும் அது எங்க காலத்துக்கான கதை கிடையாது.. உங்க காலத்துல இந்த மாதிரி தேவதைலாம் வரும்னு நீங்க நம்பியிருப்பீங்க... நாங்க 2கே கிட்ஸ்... எங்கள அப்புடி ஏமாத்த முடியாது..
ஆமா... ஆமா... உங்கள ஏமாத்துறது கஷ்டம்..
சார்... நீங்க நக்கலா சொல்ற மாதிரி இருக்கே.. 
உங்களை ஏமாததலாம்.. ஆனா கஷ்டப்பட்டு ஏமாததனும்.. 
சார்... நீங்களும் தேவதைக் கதைல பொண்ணு வர்றமாதிரிதான் சொல்றீங்க... 
உண்மைதான்... உங்கள ஈசியா ஏமாத்த முடியாது..
அனைவரும் சிரித்தனர்.
ஒரு தேர்வர், ஈசியான்னு சொல்றத விட, எளிதான்னு சொல்லலாமே.. நாம அப்புடி பேசிக்குறது ரொம்ப குறைஞ்சு போச்சு சார்..
உண்மைதான்... நமக்கு நாலைஞ்சு மார்க்கும் போயிருது..
இதென்ன சார், குண்டு போடுறீங்க.. 
உங்கள் பதிவுகளை, உரையாடல்களை மறுபடியும் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். அவையெல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் இல்லை, தமிழிலும் இல்லை. ஆனால், இந்த இரண்டு மொழிகளிலும் நாம் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாம் தேர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.  காலைல நம்ம அனுப்புறது எப்புடித் தொடங்குது..
Today, clas ku variya..
Na varla
seri.. evng papo.
பெரும்பாலும் நம்ம வாட்,ஸ் அப்ல இப்புடித்தான பேசிக்குறோம்.. 
இதுல அந்த varla சூப்பர் சார்... அதுலயும் நாங்க  2day, 2dyனு சுருக்கிருவோம்.   
மற்றொரு தேர்வரோ, இதுல என்ன பிரச்சனை..
நீங்க எழுதுற பல தேர்வுகள்ல ஆங்கிலத்தாளும் இருக்கு... அதுல Spot the errorனு ஒண்ணு வரும்... பல தேர்வுகள்ல அஞ்சு மார்க்.. ஆங்கில வரிகள்ல என்ன தப்பு இருக்குனு கண்டுபிடிக்கணும்..  நம்ம இஷ்டத்துக்கு எழுதுற நமக்கு, அவங்க குடுக்குற வரிகள்ல எந்தத் தப்பும் கண்டுபிடிக்க முடியாது.. 
ஏற்கனவே நமக்கு ஆங்கிலம்னா ஆகாது சார்..
சார்.. தமிழு தகராறு, ஆங்கிலம் ஆகாது... வரலாறு வராது.. புவிவியல் புரியாது.. அறிவியல் அறியாது.. கணக்கு கழியாது... இதெல்லாம் 90ஸ் கிட்ஸ் எங்களுக்கு சொல்லித் தந்தது..
இப்படிப்பட்ட பதிவை அனுப்பியவர் ஒரு முறை என்னைப் பார்க்க வந்தார்..அரசுத் தேர்வுக்கு தயாராகிறவர் அவர். மொழிபெயர்ப்பில் சிரமம் இருக்கிறது என்னைப் பார்க்க வந்தார். முதல்ல உங்க உரையாடல்கள ஏதாவது ஒரு மொழில பண்ணுங்கனு சொன்னேன். எழுதுறப்ப, இல்லேனா உரையாடுறப்ப நம்ம கண்ணுக்கு தப்பே தெரியாமப் போயிடும்னு எச்சரிச்சேன்.. 
உடனே அவர், ஆஙகிலத்துல அனுப்புனா தப்பாயிடுமே சார்..
இப்ப மட்டும் சரியாவா அனுப்பிட்டு இருக்கீங்கனு நான் பதிலுக்குக் கேட்டவுடன் அரண்டு போயிட்டார். ஆங்கிலத்துல அனுப்புங்கன்னு சொல்லலையே.. தமிழ்ல அனுப்பலாமே.. ரெண்டுல ஏதாவது ஒரு மொழில அனுப்புங்கன்னுதான் சொல்றேன் என்றேன். 
ஆமா... சில சமயம் நடைமுறைல ஒண்ணு பயன்படுத்துவோம்.. அதுதான் நினைவுக்கு வரும்..
அது எப்படி சார்..
நான் காதால கேட்ட ஒரு சம்பவத்த சொல்றேன்.. அந்த வகுப்புல அவர் இப்படித்தான் சொன்னார்..
“நாங்க எல்லாரும்  தேர்வு எழுதிட்டு இருந்தோம்.. 
ஒரு டேபிள்ல ஆறு பேரு இருந்தோம். ஒரு வட இந்திய நண்பரும் அதுல.. பேரு மறந்துருச்சு...
ஒரு கேள்வி... கோடிட்ட இடத்தை நிரப்புக...
Lok Sabha Speaker ________. என்றிருந்தது. 
அப்போ பி.ஏ. சங்மா... ஆனா, அந்த வட இந்திய நண்பர் குறுக்கே புகுந்து “இல்லை, அஹுஜா.. “ என்றார். குழம்பினோம்.. “டி.வி.ல கூட பார்த்திருக்கிறேன்” என்ற அடுத்த பதிலில் அதிர்ந்து போனோம்.. 
அது கடைல விக்குற ahuja speaker னு அப்புறமாத்தான் தெரிஞ்சுது..”
சிரிப்பால் வகுப்பே அதிர்ந்தது..
சார்... அந்தத் தேர்வர் வேற லெவல்..
அதற்குள் வகுப்பு நிறைவு பெற்றது. தேர்வர் வெளியில் வந்தார். அப்போதுதான் அவரைப் பார்த்தார். 
“சீனியர்... என்னாச்சு உங்களப் பாத்துப் பல நாளாச்சு”
ஆமா தம்பி... அன்னிக்கு காய்ச்சல்னு சொன்னேன்ல..இன்னிக்குதான் சென்டருக்கு வர்றேன். காய்ச்சல்லாம் இப்பல்லாம் சர்வசாதாரணமா வருது..
இப்பனு இல்ல சீனியர்... காலங்காலமா அப்புடித்தான்... ஸ்பானிஷ் ஃபுளு தாக்குனதுல கிட்டத்தட்ட 10 கோடிப் பேர் இறந்தாங்க.. 1918லருந்து 1920வரைக்கும் பரவுன இந்தக் காய்ச்சல்ல 5.4 விழுக்காடு உலக மக்கள் பாதிக்கப்பட்டாங்க..
பரவாயில்லையே... நல்ல தகவலா இருக்குதே..
சீனியர்... எனக்கு U. P. S & Cன்னு சொல்ல ஆரம்பிச்சீங்க... U. P தான் சொன்னீங்க... அடுத்து சொல்றதுக்குள்ளயும் நீங்க வரல..
கண்டிப்பா சொல்றேன்... U னா Understanding.. P னா Proceed..  இப்புடி நாம பாத்தோம்.. S னா Strengthen.. நம்ம நிலைய பலப்படுத்திக்கிறது.. 
ஒரு தேர்வ எழுதுன பிறகுதான் எனக்கு புரிதல் வந்துச்சு.. அடுத்து நகர ஆரம்பிச்சுருக்கேன்.. நான் எப்புடி என்னை பலப்படுத்துகிறது..?
சில உத்திகளக் கடைப்பிடிக்கிறதுக்கான நேரம் இது..
இது வகுப்புகள்ல சொல்லித் தருவாங்களா..?
நம்ம மையத்துல இல்ல தம்பி..
அப்படினா, நீங்கதான் எனக்குச் சொல்லித் தரணும்.. தனியா ஃபீஸ் வாங்கிக்கோங்க..
அதெல்லாம் வேணாம், தம்பி... நான் ரெண்டு உத்தி சொல்லித் தர்றேன்.. ஒண்ணு. Visualisation... காட்சிப்படுத்துதல்.. இன்னொன்னு, Step Method.. படிக்கட்டு முறை... ஆனா, ,இன்னிக்கு நேரமில்ல... நாளைக்குக் காலைல பாக்கலாம்..
சரிங்க சீனியர், பாக்கலாம்..