tamilnadu

img

ஸ்டாலின் அருங்காட்சியகம் - சிதம்பரம் ரவிச்சந்திரன்

“அம்மா”. ஜோசப் ஸ்டாலின் அழைத்தார். குரலைக் கேட்டே தாய் மகனை அறிந்துகொண்டார். அன்றைய சோவியத் யூனியனின் ஜனாதிபதி என்று வர்ணிக்கப்பட்ட ஜோசப் ஸ்டாலினின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது.

தாய் எக்கடெரினுக்கு (Ekaterine) பார்வை லேசாக  மங்கியிருந்தது. முதுமை உடலை தளர்த்த ஆரம்பித்தி ருந்த காலம் அது. மகனின் வரவு  தாயின் பாசமும் ஏக்கமும் கலந்த  உணர்ச்சிகளை பொங்கி எழச்செய்தது. நடுங்கும் உதடு களுடன் அவர் பேசினார்.”நீ இப்போது எங்கே இருக்கிறாய் ஜோசப்?. இங்கே நான் தன்னந்தனியாக இருக்கிறேன்”. “நீ எங்கே இருக்கிறாய்?”. அவர் மீண்டும் கேட்டார். மகன் தாயை ஆறுதல் செய்தபடி சொன்னார். “நான் மாஸ்கோவில் இருக்கிறேன். கட்சியில் உயர்ந்த பதவியில் இருக்கிறேன்”. தாயின்  கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. தழு தழுத்த குரலுடன் சொன்னார். “அந்தப் பதவியை விட்டுவிட்டு இங்கே வா. அப்பா செய்த வேலை யை நீ செய்து வாழ்ந்தால் போதும்”. தந்தை பிசாரியன் (Besarion Jughashvili) ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்தார். தாய் துக்கத்தை விழுங்கிக்கொண்டு சொன்னார்.

அப்பா செய்த வேலைதானே நல்ல வேலை? செருப்பு தைக்கும்  வேலையானாலும் சமுதாயத்தில் அதற்கும் மதிப்பு இருக்கிறது”. மகன் இன்னும் சிறிது நேரம் தாயின் அருகில் இருந்தார். தாயை சமாதானப்படுத்தி சொன்  னார். “நான் திரும்பவும் வரு கிறேன்”. ஆனால் அன்று 1935  இல் தான் கொடுத்த வாக்கை அவ ரால் நிறைவேற்ற முடியவில்லை. 1937 இல் தாய் இறந்தார். தாயைக் காண மகனுக்கு பிறந்த நாடான ஜியார்ஜியாவிற்கு வரமுடியவில்லை. ஜோசப் ஸ்டாலின் பிறகு சோவியத் யூனியனின் ஜனாதிபதி யானார். ஜியார்ஜியா ஸ்டாலி னின் தாய்நாடு. கோரி (Gori) அவர்  பிறந்த கிராமம். ஸ்டாலின் பிறந்த போது அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ஐயோஸா பிசாரியோனிஸ் டிசியி ஜஃப்க்கஸ்வெலி (Ioseb Besarionis dze Jughashvili) லெனினின் ஆளுமையால் கவரப்பட்ட ஸ்டாலின். கட்சி பணி செய்ய மாஸ்கோவிற்கு போனார். இருபது ஆண்டுகளுக்கு பிறகு  அவர் மறுபடி தாயைக் காணச் சென்றார்.

ஜியார்ஜியா இன்று பன்னாட்டு சுற்றுலா வரைபடத்தில் முக்கிய  இடம்பெற்றுள்ள நாடு. இயற்கை  எழில் கொஞ்சும் சிறிய நாடு.  இங்குள்ள ஸ்டாலின் அருங்காட்சி யகம் இங்கு வரும் அனைவரை யும் கவரும் ஒரு இடம். அவரு டைய தந்தை கட்டிய சிறிய வீடு இப்போது அரசின் பராமரிப்பில் பாதுகாக்கப்பட்டுவருகிறது. அருங்காட்சியகத்தில் ஸ்டாலின் வாழ்வில் நடந்த சம்பவங்களை விளக்கும் படங்கள் இடம்பெற் றுள்ளன. இதில் ஒன்றுதான் அவர் தாயுடன் இருக்கும் படம். தாயைப் பார்க்க அவர்வந்தபோது நடந்த சம்பவங்களை வழிகாட்டிகள் விவரிக்கின்றனர். இதில் ஒன்றே  மேலே குறிப்பிடப்பட்ட உரை யாடல். ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் இருந்து பல படங்கள்,  ஆவணங்கள், பயணங்க ளின்போது அவர் பயன்படுத்திய  ஒரு ரயில் பெட்டி போன்றவை  இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள் ளன. ஒயின் உற்பத்தியில் முன்னணி யில் இருக்கும் நாடு ஜியார்ஜியா.  இந்தியாவில் இந்த நாடு பிரபல மாக உள்ளது. பல இந்திய மாநி லங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர்.