tamilnadu

img

உணவிருக்கும் இடத்தை நினைவில் வைத்துக்கொள்ளும் பறவைகள் -

விழாக்காலத்தில் விடலைப் பருவத்தினர் அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை எங்கே ஒளித்துவைத்தோம் என்பதை நினைவுகூற முயற்சி செய்யும்போது கறுப்பு தலை சிக்கடிகள் (Black-capped Chickadee) என்னும் (வட அமெரிக்காவில் குறிப்பாக கனடாவில் பரவலாக வாழும்) சிறிய பறவைகளுக்கு அவை எடுத்துவந்து பதுக்கிவைத்திருக்கும் இடத்தை நினைவுபடுத்திக் கொள்வதில் எந்த சிரமமும் இல்லை.

உணவை பதுக்கிவைக்கும் அதிசயப்பறவை

இதற்கான காரணத்தை ஆய்வா ளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் உணவை பதுக்கும் போது அவை பட்டைக்குறியீட்டை (barcode) உருவாக்குகின்றன. வெது வெதுப்பான மாதங்களில் இப்பறவைகள் உணவை பதுக்கிவைப்பது வழக்கம். ஒரு  சில புள்ளிவிவரங்கள்படி ஒரு பறவை ஒரு  ஆண்டிற்கு 5,00,000 உணவுப்பொருட்களை பதுக்கி வைக்கிறது. ஆனால் இதில் மிக சுவாரசியமான ஒன்று தாங்கள் பதுக்கிவைத்த சிறிய  அளவு திட உணவை அவை நினைவில்  வைத்துக்கொள்கின்றன. இந்த செயல்  முறைக்கு பின்னால் இருக்கும் இரக சியத்தை இப்போது ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆய்வுக்கட்டுரை செல் (Cell) என்ற ஆய்விதழில் வெளி வந்துள்ளது. இந்த பறவைகளுக்கு நூற்று இருப திற்கும் அதிகமான இடங்களில் அங்கும் இங்குமாக சூரியகாந்தி விதைகளை கிடைக்குமாறு செய்து யு எஸ் ஆய்வா ளர்கள் இவற்றின் நினைவாற்றலை ஆராய்ந்தனர். பறவைகளின் நடத்தை மற்றும் விதைகள் வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு இடத்திலும் அவை உணவை சேமித்தது, மீண்டும் அடைந்தது மற்றும்  பதுக்கிவைத்த முறை பற்றி காணொலி யில் பதிவு செய்தனர். ஒவ்வொரு பறவையின் மூளையிலும் ஆய்வாளர்கள் நீண்டு மெலிதான துருவு கோலை (probe) பதித்து அதன் ஹிப்போ கேம்பஸ் (hippocampus) பகுதியில் நடை பெறும் நியூரான் செயல்களை ஆராய்ந்த னர். மூளையின் இந்த பகுதியே நினை வாற்றல் உருவாவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறை பறவைகள் விதை களை பதுக்கிவைக்குகும்போதும் அவை அதே இடத்தில் இருந்தாலும் வேறுபட்ட நியூரான்கள் கூட்டாக தூண்டப்பட்டு ஒரு  பட்டைக்குறியீடு பாணி செயல் நடைபெறு கிறது. சிறிய அளவு திட உணவு மீண்டும்  அடையப்படும்போதும் இதே பட்டைக் குறியீடு உருவாகிறது. இந்த குறியீடுகள் இடமறிய உதவும் செல்களில் இருந்து (place cells) தனித்துவம் மிக்கவையாக உள்ளன.

அதிசயிக்கவைக்கும்  பறவையின் மூளை

“ஹிப்போகேம்பஸில் உள்ள நியூ ரான்கள் குறிப்பிட்ட இடங்களை நினை வில் வைத்துக்கொள்வதில் முக்கிய செயல்  புரிகின்றன” என்று ஆய்வுக்கட்டுரையின் முதல் ஆசிரியரும் கொலம்பியா பல்க லைக்கழக சக்கர்மேன் ஆய்வுக்கழக (Zuckerman Institute) விஞ்ஞானியுமான டாக்டர் செல்மான் செட்டி கூறுகிறார். பறவை கள் விதைகள் உள்ள இடங்களை சென்ற டையும் ஒவ்வொரு முறையும் இடமறிய உதவும் செல்கள் செயல்படுகின்றன. பட்டைக்குறியீடுகள் அந்த பறவை விதையை சேமிக்கும் அல்லது மீண்டும் அடையும்போது மட்டுமே உருவாகின்றன. குறிப்பிட்ட நிகழ்வை பறவைகள் நினை வில் வைத்துக்கொள்ளும்போது வேறு பட்ட செயல்முறையை பின்பற்றுகின்றன என்று ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர்.  இது ஒர் இடத்தின் மன வரைபடத்தில் இருந்து (mind map) வேறுபட்டது. பட்டைக்  குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் அனு பவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இது பறவையின் வாழ்வில் இடம்  மற்றும் காலத்தை பொறுத்து தனித்துவ மானது. இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இந்த முடிவுகள் மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளின் மூளையிலும் நடைபெறலாம். ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்கான நினைவை உருவாக்கும்போது நம் மூளை  சீரற்ற முத்திரையை(lable) உருவாக்கு கிறது. இது அந்நிகழ்வு பற்றிய தகவலை சேமிக்க உதவுகிறது. இது ஒரு ஸ்டோர். அதன் ஒவ்வொரு பொருளையும் பதிவு  செய்யும் நடைமுறையில் தகவல்கள் சென்ற டையும்போது அதன் முத்திரை ஸ்கேன் செய்யப்படுவதற்கு இணையானது. பொதுவாக காணப்படும் இந்த சின்  னஞ்சிறிய பறவையின் மூளை மற்றும்  அதன் செயல்திறன்கள் மகத்தானவை என்பதை இந்த ஆய்வு முடிவு எடுத்துக் காட்டுகிறது. இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிரினத்தின் மூளையிலும் நடைபெறும் அதிசயங்களையே இது நமக்கு சொல்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.